கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு நுகர்வோரின் பாதுகாப்பிற்காக மின் துறை இணையதளம், இதர மொபைல் செயலிகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின் துறையின் அனைத்து மின் சேவைகளையும் நேற்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை அதிகாரிகள் கூறுகையில், மின் கட்டணம் மட்டுமின்றி, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், இட மாற்றம், லோடு அதிகரிப்பு, லோடு குறைப்பு என பல சேவைகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை நேற்று 1ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது.
இனி, இணையம் வழியாக https://pedservices.py.gov.in என்ற இணையதளத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அனைத்து சேவைகளையும் விரைவாக பெற முடியும். இதற்கு நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“