scorecardresearch

விவேகானந்தா ரெட்டி கொலை; அதிகாரப் போட்டி, அரசியல் சூழ்ச்சி

விவேகானந்தா ரெட்டி கொலை தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தனர். தற்போது, பாஸ்கர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

All in Andhras first family Intrigue murder and now an arrest

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) மூத்த தலைவர் ஒய் எஸ் விவேகானந்த ரெட்டி, மைடுகுருவில் தொண்டர்களைச் சந்தித்துவிட்டு ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்துலாவில் உள்ள தனது பங்களாவுக்கு மார்ச் 14, 2019 அன்று திரும்பினார்.
அப்போது, சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்களுக்கு ஒரு மாதம் கூட இல்லை. விவேகானந்தா மறைந்த ஒய் எஸ் ராஜசேகர் (ஒய்எஸ்ஆர்) ரெட்டியின் தம்பி ஆவார்.

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அடுத்த மாதமே விவேகானந்தா மர்மமான முறையில் குளியலறையில் பிணமாக கிடந்தார்.
இந்த கொலை ஜெகனின் அரசியல் பிம்பத்தை சிதைக்கவில்லை. ஜெகனின் தெளிவான பரப்புரை, சிந்தனை அவருக்கு மாநிலத்தில் 151 இடங்களை பெற்றுக்கொடுத்தது. எனினும் இந்தக் கொலை மாநிலம் முழுக்க அதிர்வலைகளை கொடுத்தது.

இந்நிலையில், தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒய்.எஸ்.ஆரின் உறவினர் ஒய்.எஸ்.பாஸ்கர் ரெட்டி இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது, ஆந்திரப் பிரதேசத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வம்சங்களில் ஒன்றான ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் உள்ள அதிகார சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ராஜ்சேகர ரெட்டி குடும்பம்

1980களில் இருந்து, யெடுகுரி சண்டிண்டி குடும்பம் அவர்களின் சொந்த ஊரான புலிவெந்துலாவிலும், கடப்பா மாவட்டத்தின் பெரும்பகுதியிலும் சவாலின்றி இயங்கி வருகிறது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாத்தா ராஜா ரெட்டி, சுரங்கம், ரெட்டி சமூகத்தின் வலிமையான தலைவராக மாறுவதற்கு முன்பு மேலாளராகத் தொடங்கி, பின்னர் மங்கம்பேட்டில் உள்ள ஒரு பேரைட்ஸ் சுரங்கத்தின் பங்குதாரராக உயர்ந்தார்.

இவர் நடுத்தர கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இரண்டு முறை கிராம பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1982 இல் நிறுவப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) நுழைவு, புலிவெந்துலா மற்றும் கடப்பா மாவட்டம் முழுவதும் சுரங்கங்கள் மற்றும் அரசியல் இடத்தைக் கட்டுப்படுத்த போட்டியிடும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே போட்டி மற்றும் பதட்டத்தை அதிகரித்தது.

அவரது செல்வாக்கு பெருகிய போதிலும், பல்வேறு சுரங்கப் பிரிவுகளுக்கு இடையே இருந்த போட்டி, ராஜா ரெட்டி இரண்டு முறை சர்பஞ்ச் தேர்தலில் போட்டிப் பிரிவுத் தலைவர்களிடம் தோற்றார். மே 23, 1998 இல், ஒபுலவாரிப்பள்ளியில் பாரைட் சுரங்க உரிமைக்காகக் கூறப்படும் கச்சா வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

ராஜா ரெட்டியின் மூத்த மகன் ராஜ்சேகர ரெட்டி, இவர் காங்கிரஸில் சேர்ந்து கலால் மற்றும் கல்வி அமைச்சராக பணியாற்றினார். கடப்பா தொகுதியில் இருந்து நான்கு முறை (1989 முதல் 1998 வரை) எம்.பி ஆவதற்கு முன்பு – 1983 மற்றும் 1985 இல் – தெலுங்கு தேசம் கட்சி அலையின் உச்சக்கட்டத்தில் கூட புலிவெந்துலாவிலிருந்து ஒய்எஸ்ஆர் வெற்றி பெற்றார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (APCC) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

கடப்பா மாவட்டம் முழுவதிலும் குறிப்பாக ஒபுலவாரிப்பள்ளி மற்றும் மங்கம்பேட்டை ஆகிய பகுதிகளின் சுரங்கங்கள் மீதான அவர்களது அரசியல் மற்றும் கட்டுப்பாட்டின் கலவையானது ஒய்எஸ் குடும்பம் மாநிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றாக உருவெடுத்ததை உறுதி செய்தது.

அப்போது மாணவராக இருந்த கடப்பா டிடிபி எம்எல்சி பி ராமகோபால் ரெட்டி, ராஜா ரெட்டி சுரங்கத்தை கைப்பற்றிய பிறகு ஒய்எஸ் குடும்பத்தின் அதிர்ஷ்டம் எப்படி மாறியது என்பதை நினைவு கூர்ந்தார். “ராஜா ரெட்டி சுரங்கத்தில் மேற்பார்வையாளராகவும் மேலாளராகவும் பணிபுரிந்தார்.

ஆனால் வி. நரசையாவுக்குச் சொந்தமான சுரங்கத்தில் பங்குதாரரானார். ராஜா ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் இப்பகுதியில் இயங்கி வந்த பல சுரங்கங்களை கைப்பற்றினர். பல்வேறு சுரங்கப் பிரிவுகளுக்கு இடையே வன்முறை மோதல்கள் நடந்த காலம் அது. ராஜா ரெட்டி சுரங்கத் தொழிலை ஒருங்கிணைத்தபோது, உள்ளூர் அரசியலில் ஒய்.எஸ்.ஆரின் அந்தஸ்து அபரிமிதமாக வளர்ந்தது,” என்றார்.

குடும்பத்திற்குள் அதிகாரப் போராட்டம்

அவர்களின் உயர்ந்த செல்வாக்கு குடும்பத்திற்குள் பதட்டத்தையும் கொண்டு வந்தது. ராஜா ரெட்டிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர்.
ஒய்எஸ்ஆர் கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு சென்றபோதுதான் விவேகானந்தருக்கு 1989-ல் புலிவெந்துலாவில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

விவேகானந்தா ரெட்டி நடைமுறை உண்மைகளை தெரிந்தவர். அதிகாரம் தனது மூத்த சகோதரர் கைகளில்தான் உள்ளது என்பதை நன்கறிந்திருந்தார்.
இதற்கிடையில், ஒய்எஸ் குடும்பத்தின் மற்றொரு பிரிவான ராஜா ரெட்டியின் சகோதரரின் மகன் பாஸ்கர் ரெட்டி மற்றும் மகன் அவினாஷ் ரெட்டி ஆகியோர் தங்கள் அடையாளத்தை பதிக்க முயன்றனர்.

புலிவெந்துலாவின் முன்னாள் ஜில்லா பரிஷத் உறுப்பினரான பாஸ்கர் ரெட்டி, 1998 ஆம் ஆண்டு மே மாதம் ஒய் எஸ் ராஜா ரெட்டியை (ஒய்எஸ்ஆரின் தந்தை) வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பி உமாமகேஷ்வர் ரெட்டியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், விவேகானந்தா ரெட்டி கொலை தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தனர். தற்போது, பாஸ்கர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அக்குடும்பத்தில் அதிகாரப் போட்டி வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் மேலும் சிலை கொலைகள் நடந்தன. விவேகானந்தா ரெட்டியின் உதவியாளர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஒய்எஸ்ஆர் குடும்ப உறுப்பினர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டு எழுந்தது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: All in andhras first family intrigue murder and now an arrest