All India Doctor's Strike : கொல்கத்தாவில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் மருத்துவமனை தான் என்.ஆர்.எஸ் (Nil Ratan Sircar (NRS) மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. கடந்த 10ம் அன்று 80 வயது மதிக்கத்தக்க முகமது சயீத் என்பவர் உயிரிழந்தார். அதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி, இறந்தவர்களின் உறவினர்கள், ஜூனியர் டாக்டர்கள் இருவரை தாக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வந்தது. தாக்குதலுக்கு ஆளான மருத்துவர்களுக்கு ஆதரவாக பல மருத்துவர்கள் போராட்ட களத்தில் குதித்ததோடு, பணிகளை செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நோயாளிகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதால் இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டது.
ஆனால் மருத்துவர்கள் மம்தா பானர்ஜியின் அழைப்பினை ஏற்கவில்லை. மேலும் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் இயங்காததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த முழுமையான தகவல்களை நீங்கள் தற்போது ஆங்கிலத்திலும் பெற்றிடலாம்.
Live Blog
IMA Calls Nationwide Strike : மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள்
மக்கள் தரப்பு இந்த போராட்டத்தை வேறு விதமாக பார்த்து வருகிறது. மக்களுக்காக பணியாற்றும் மருத்துவர்கள் மக்களின் உயிரில் விளையாடக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். கடமை தவறாத தமிழக மருத்துவர்கள் மாற்று வழியை தேர்வு செய்துள்ளனர்.
கடமை தவறாத மருத்துவ சேவையை போற்றுவோம்..! #Doctors #TamilNadu #TNDoctors pic.twitter.com/mJW6QXwIEj
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 17 June 2019
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கறுப்பு நிற பேட்ச் அணிந்து போராட்டத்திற்கு ஆதரவு. தனியார் மருத்துமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் மட்டும் வேலை நிறுத்தத்தை அமலில் கொண்டு வந்துள்ளனர். 2 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
▪️காலை 6 மணி முதல் 24 மணி நேர மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது
▪️தமிழகத்திலும் வேலை நிறுத்தம் தொடங்கியது#Doctorsstrike #AIIMS pic.twitter.com/WtMlXb1yT2— Sun News (@sunnewstamil) 17 June 2019
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்படும் அவர்களின் அறைகள்
Rajasthan: Doctors on strike at Jaipuria Hospital in Jaipur; Indian Medical Association (IMA) today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal pic.twitter.com/eE1LS1nQQA
— ANI (@ANI) 17 June 2019
நேற்று, இந்த போராட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அறிவித்த எய்ம்ஸ் நிர்வாகமும் தற்போது போராட்டத்தில் ஈடுபட உள்ளது. மதியம் 12 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைப் பேறு பிரிவு போன்ற முக்கிய பிரிவுகள் எந்த விதமான தடைகளும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் டாக்டர்கள் மட்டுமே இதில் பங்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: Resident Doctors' Association of All India Institute of Medical Sciences (#AIIMS) to go on strike from 12 noon today till 6 am tomorrow, in support of violence against doctors in West Bengal. Emergency services including Casualty, ICU and Labour room shall be continued. pic.twitter.com/H7GD8xLNbQ
— ANI (@ANI) 17 June 2019
குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்திருக்கும் சர் சாயாஜிராவ் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்
Gujarat: Indian Medical Association today has called for a nationwide strike of doctors in the wake of violence against doctors in West Bengal; Doctors at Sir Sayajirao General Hospital in Vadodara hold protest outside Out Patient Department pic.twitter.com/Ya6NS3CE3x
— ANI (@ANI) 17 June 2019
ஆறு அம்ச கோரிக்கையையும், மம்தா பானர்ஜீ மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நோயாளிகளின் உறவினர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டதன் சான்றுகளை காட்ட வேண்டும்.
மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும்
சிசிடிவி போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட மூன்றடுக்கு பாதுகாப்பினை தர வேண்டும்
நோயாளிகளை காணவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளாக அமைந்துள்ளது.
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திரிபுரா மாநில மருத்துவக் கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவினைத் தவிர அனைத்து மருத்துவமனை செயல்பாடுகளும் நடைபெறும் என்று டாக்டர் தெப்பர்மா (பொதுச்செயலாளர், திரிபுரா இந்திய மருத்துவக் கழக பிரிவு) அறிவித்துள்ளார்.
Dr. S Debbarma,General Secy,IMA Tripura Unit:All Tripura Government Doctors’ Association & IMA Tripura to stop providing all OPD services for 24-hrs,today,as mark of protest against recent violence against doctors in West Bengal; except OPD services all services will be rendered pic.twitter.com/4nRi6Y2klB
— ANI (@ANI) 16 June 2019
Doctor Protest குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன ?
புற நோயாளிகள் பிரிவு இன்று காலை 6 மணி துவங்கி நாளை காலை 6 மணி வரை இயங்காது. மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உடனடியாக மருத்துவர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவினை தயாரிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வியாழக்கிழமையன்று சமாதான பேசச் சென்ற மம்தா பானர்ஜீ, நான்கு மணி நேரத்தில் வேலைக்கு திரும்பவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று அறிவித்தத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்திய மருத்துவ கழகம் (Indian Medical Association) இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. வழக்கம் போல் மருத்துவமனை இயங்கும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights