கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, இரண்டு மாதங்களுக்கு மேலாக அமலில் இருந்த பொதுமுடக்கத்துக்கு பிறகு, ஜூன் 1 ஆம் தேதி தான் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மூன்று வாரங்கள் இடைவெளிக்கு பிறகு, தற்போது மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisment
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 200 ரயில்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நாடு முழுவதும் தற்போது அட்டவணைப்படி இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் என அனைத்து விதமான ரயில் சேவைகளும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 30 ஆம் தேதி வரை, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயண டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கான முழு கட்டணமும் பயணிகளுக்கு திரும்ப தரப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கவும் தற்போதைக்கு அனுமதியில்லை; அதேசமயம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
டெல்லி, மகாரா்ஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்கடாமல் உள்ளதன் காரணமாக, ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil