Advertisment

கன்னட அமைப்புகள் பந்த்: 144 தடை- பெங்களூருவில் பதற்றம்

அறிக்கையில், “மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அந்தந்த பகுதியின் சூழ்நிலையின் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை பள்ளி நிர்வாகத்தின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Cauvery Water Dispute

2,000க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ள கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 Cauvery Water Dispute- Karnataka Bandh: கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக காவல்துறை துணை ஆணையர் தயானந்தா வியாழக்கிழமை (செப்.28) அறிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவில் உள்ள பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்ஸ் (KAMS) கர்நாடக பந்த்க்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

Advertisment

அதில், “வெள்ளிக்கிழமை கர்நாடக பந்த் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையை தீர்மானிக்கும் மாவட்டத்தின் நிலைமையை மதிப்பீடு செய்ய அந்தந்த மாவட்டங்களின் துணை ஆணையர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அந்தந்த பகுதியின் சூழ்நிலையின் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை பள்ளி நிர்வாகத்தின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது எனக் கோரி, 2,000க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ள கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டுப்பாடு தொடங்கும் என்று போலீஸ் கமிஷனர் பி தயானந்த் தெரிவித்தார்.

All schools and colleges to remain shut tomorrow due to Karnataka Bandh

இதற்கிடையில், கன்னட அமைப்புகளுக்கான ஒருங்கிணைந்த அமைப்பான ‘கன்னட ஒக்குடா’, போலீஸ் நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை கண்டன ஊர்வலம் நடைபெறும்.

இதற்கிடையில், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு கர்நாடகாவுக்கு தமிழகத்துக்கு வியாழக்கிழமை முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் சித்த ராமையா புதன்கிழமை தெரிவித்தார்.

அதே நாளில், திட்டமிடப்பட்ட ஆய்வுப் பணிகளுக்காக, கெங்கேரியிலிருந்து சல்லகட்டா வரை (நம்ம மெட்ரோவின் ஊதாப் பாதையின் ஒரு பகுதி) புதிதாகக் கட்டப்பட்ட விரிவாக்கத்தில் மைசூர் சாலை மற்றும் கெங்கேரி நிலையங்களுக்கு இடையே மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும்.

இருப்பினும், பையப்பனஹள்ளி மற்றும் மைசூர் சாலை, ஒயிட்ஃபீல்டு மற்றும் கே ஆர் புரம் நிலையங்கள் மற்றும் முழு பசுமைப் பாதையிலும் ரயில் சேவைகள் இருக்கும்.

144 தடை உத்தரவு

பெங்களூரு போலீசார் 144 தடை உத்தரவு விதித்துள்ள நிலையில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பேருந்துகள் ஓடும்

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை கர்நாடக பந்த் இருந்தபோதிலும் BMTC இன் அனைத்து வழித்தடங்களும் வழக்கம் போல் இயங்கும் என்று பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஆட்டோ ரிக்ஷா ஓடாது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கு ஆதரவாக கர்நாடக ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர்கள் சங்கத்தின் (ARDU) அவசர அலுவலகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பந்த்க்கு ஆதரவளிக்குமாறு அனைத்து ஓட்டுனர்களின் சகோதர சகோதரிகளுக்கும் ARDU அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karnataka Cauvery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment