/tamil-ie/media/media_files/uploads/2018/10/maneka-gandhi759.jpg)
எம்.ஜே அக்பர் MeToo
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பெண்கள் வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பணியிடத்தில் பாலியல் ரீதியாக பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கையேடுகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜே அக்பர் MeToo புகார்
மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் தன்னுடைய பணியை ஒரு பத்திரிக்கையாளராக தொடங்கியவர். அவர் செய்து வந்த வேலையில் அவர் காட்டிய பற்றுதல், நிறைய இளைஞர்களை பத்திரிக்கையாளராகவும், ஊடகவியலாளராகவும் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியன் ஏஜ் பத்திரிக்கையின் ஆசிரியராக அவர் இருந்த போது, தன்னுடைய இச்சைக்கு, புதிதாக ஊடகத்துறையில் கால் பதிக்கும் பெண்களை துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
இரண்டு வாரங்களாக மீடு என்ற கேம்பைன் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் அவலங்களை வெளி உலகிற்கு தெரிவித்து வருகிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் இந்த பாலியல் புகாரில் சிக்குவது இதுவே முதல் முறை. அக்பர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையாக படிக்க
MeToo புகார் குறித்து அமைச்சர் மேனகா காந்தி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று, எம்.ஜே. அக்பர் மீதான குற்றச்சாட்டுகள் உச்சத்தில் இருக்கும் போது “பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் மீதான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் மூலம் இது அடிக்கடி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. மீடியாவில் மட்டும் அல்ல அரசியல் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களிலும் இது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்று மேனகா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பெண்கள் இது பற்றி அதிகம் பேசுவது கிடையாது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் அவர்களை கேளிக்கைக்கு உள்ளாக்குவார்கள் மற்றும் அவர்களின் நடத்தைகள் மீது சந்தேகம் எழும். இதனால் தான் அவர்கள் இது போன்ற பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசுவதில்லை.
ஆனால் தற்போது நிலைமை வேறாக இருக்கிறது. பெண்கள் துணிந்து முன் வந்து தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அளிக்கும் புகார்களுக்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஜே அக்பர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என தொடர்ந்து பல்வேறு கேள்விகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேட்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : #MeToo விவகாரம் : பணியிடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து ஒரு பார்வை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us