Advertisment

சீருடை நிறத்தில் ஹிஜாப்... கேந்திரியாவில் அனுமதிக்கும்போது அரசு பள்ளிகளில் தடை ஏன்? - ஐகோர்ட்டில் வாதம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவிகளின் கால்சட்டை இருக்கும் நிறத்திலேயே தலையை மூடும் முக்காடு அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
சீருடை நிறத்தில் ஹிஜாப்... கேந்திரியாவில் அனுமதிக்கும்போது  அரசு பள்ளிகளில் தடை ஏன்? - ஐகோர்ட்டில் வாதம்

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப் பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளிச் சீருடையுடன் பொருந்தக்கூடிய வண்ணங்களில் முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிய அனுமதியளிக்கும் போது, அதையே மாநில கல்வி நிறுவனங்களிலும் பின்பற்றலாமே என உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 3 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு, தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவிகளின் கால்சட்டை இருக்கும் நிறத்திலேயே தலையை மூடும் முக்காடு அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

publive-image

சொல்லப்போனால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தனி சீருடைகள் வைத்திருந்தாலும், இந்த முறையை அனுமதிக்கிறார்கள். தேசிய அளவில் கூட இதுவே மரபு. தலையில் முக்காடு அணிய அரசாங்கங்கள் அனுமதித்துள்ளன.

இது அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவின்படி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியவும், சீக்கியர்கள் தலையில் டர்பன் அணியவும் அனுமதி உள்ளது" என வாதிட்டார்.

மேலும் பேசிய அவர், "சட்டப்பிரிவு 25-ன் கீழ் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்ற அரசாங்க உத்தரவு முற்றிலும் தவறானது. இதனை தீர்மானிக்க CDC-க்கு அனுப்புவது முற்றிலும் சட்டவிரோதமானது. மத சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதில் அரசின் உதவிக்கு வரும் ஒரே கட்டுப்பாடுகள் பொது ஒழுங்கு ஆகும்

publive-image

பொது ஒழுங்கு என்பது மாநில பொறுப்பாகும். ஒரு எம்.எல்.ஏ மற்றும் துணை அதிகாரிகளைக் கொண்ட CDC, இந்த அடிப்படை சுதந்திரத்தை 25வது பிரிவின் கீழ் பயன்படுத்தலாமா இல்லையா என்பதை முடிவு செய்யுமா என்பது கேள்விக்குறி தான். ஒரு கூடுதல் சட்டப்பூர்வ அதிகாரம் நமது அரசியலமைப்புச் சுதந்திரத்தின் பாதுகாவலராக மாற்றப்பட்டுள்ளது. இது முற்றிலும் அனுமதிக்க முடியாதது" என்றார்.

இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடர உள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை விசாரணை தொடங்கியபோது, தலைமை நீதிபதி அவஸ்தி, இந்த விவகாரம் குறித்து ஊடகங்களின் பொறுப்பான அறிக்கையை வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hijab Row Karnataka Kendriya Vidyalaya Hijab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment