தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட டிசம்பர் 4-ம் தேதி ஐதராபாத் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார் என்று தெலங்கானா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Allu Arjun refused to leave even after he was told of woman’s death’: Hyderabad police on Pushpa 2 premiere stampede
"வெளியில் உள்ள பிரச்னை" தெரிந்தவுடன் தான் சந்தியா தியேட்டரை விட்டு வெளியேறிவிட்டேன் என்று அல்லு அர்ஜுன் கூறிய ஒரு நாள் கழித்து தெலங்கான காவல்துறையின் இந்த கருத்து வந்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் கிட்டத்தட்ட நள்ளிரவு வரை தியேட்டரில் இருந்ததைக் குறிக்கும் நேரத்தைக் காட்டக் கூடிய சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீசாரஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர்.
ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐதராபாத் நகர காவல் ஆணையர் சி.வி. ஆனந்த், இந்த கூட்ட நெரிசல் மற்றும் அதன் பின்விளைவுகளுக்கு வழிவகுத்த நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார்.
சிக்கடப்பள்ளி மண்டல ஏ.சி.பி ரமேஷ் குமார் கூறுகையில், காவல்துறையின் செய்தியை நடிகரிடம் தெரிவிப்பதாக கூறி, அர்ஜுன் அருகில் செல்ல தியேட்டர் மேலாளர் போலீசாரை முதலில் அனுமதிக்கவில்லை.
ஏ.சி.பி-யின் கருத்துப்படி, அல்லு அர்ஜுன் வெளியேறாததால், போலீசார் அவரது மேலாளரை அணுகி, பெண்ணின் மரணம் மற்றும் அவரது ஒன்பது வயது மகனுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தனர். ஆனால், மேலாளரும் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று அதிகாரி கூறினார்.
“இறுதியாக அல்லு அர்ஜுன் அருகில் சென்று பெண்ணின் மரணம் மற்றும் சிறுவனின் நிலை மற்றும் வெளியில் உள்ள குழப்பம் பற்றி அவரிடம் தெரிவித்தபோது, அவர் படத்தைப் பார்த்துவிட்டு செல்வதாகக் கூறி வெளியேற மறுத்துவிட்டார்” என்று ஏ.சி.பி கூறினார்.
நள்ளிரவை நெருங்கிவிட்டதால், தியேட்டருக்கு வெளியே சூழ்நிலை குழப்பமாக மாறியதால், நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசலால், டி.சி.பி-யும் ஏ.சி.பி-யும் உள்ளே நுழைந்து நடிகரை வெளியேறச் சொன்னார்கள். "நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியேறுமாறு காவல்துறையின் கோரிக்கைகளை நடிகர் கவனிக்கவில்லை. என்ன நடந்தது என்பதை இந்த வீடியோ காட்சிகள் தெளிவுபடுத்தவில்லையா? போலீஸ் அதிகாரிகள், மூத்தவர்கள் கூட, நடிகரை அணுகி அவரை வெளியேறச் செய்ய பல சவால்களை எதிர்கொண்டனர்”என்று போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த் கூறினார்.
இந்த காட்சிகள் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட பாதுகாப்பாளர்கள் தள்ளினர், போலீசார் உட்பட மக்களைத் தள்ளினர்.
"பிரபலங்களால் பணியமர்த்தப்பட்ட பவுன்சர்கள் அவர்களின் நடத்தைக்கு அவர்கள்தான் பொறுப்பு மற்றும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று எச்சரிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். பவுன்சர்கள் மற்றும் அவர்களை பணியமர்த்தும் ஏஜென்சிகள், சீருடையில் இருக்கும் காவலரையோ அல்லது சாதாரண குடிமக்களையோ யாராவது தொட்டால் அல்லது தள்ளினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். சந்தியா திரையரங்கில் பவுன்சர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், மக்களை, அங்கு பணியில் இருக்கும் போலீஸ்காரர்களைக்கூட எப்படித் தள்ளினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.” என்று போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த் கூறினார்.
இந்த வழக்கை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருகிறோம் என்றார்.
தனித்தனியாக, கரீம்நகரில் நடந்த ஒரு நிகழ்வில், தெலங்கானா தலைமை காவல்துறை இயக்குநர் டாக்டர் ஜிதேந்தர், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதை விட மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
“தொழில் மற்றும் பொது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அது ஒரு படத்தின் ஹீரோவாக இருந்தாலும் அல்லது வேறு எந்த முக்கிய நபராக இருந்தாலும், அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பும் உயிரும் மிக முக்கியமானது. பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், ஆனால், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல” என்று டி.ஜி.பி கூறினார்.
இதனிடையே, சில போராட்டகாரர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட செய்திகள் வெளியானது. நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்தார். திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் மாநில டிஜிபி, நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“