சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கு : சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார்கள் எழுந்தன. அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா. ராகேஷ் அஸ்தானா தன்னுடைய இயக்குநர் அலோக் வர்மா மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வைத்துக் கொள்ளவும் தேசம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசும் பொருளானது சிபிஐ விவகாரம். தொழிலதிபர் மொய்தீன் குரோஷி தொடர்பான வழக்கு ஒன்றில், ஹைதராபாத்தை சேர்ந்த சனா பாபுவை வழக்கில் இருந்து விடுவிக்க ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக, சனா பாபு ஒப்புக் கொண்டார்.
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கு : மத்திய அரசின் ஒப்புதல்
இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இரு அதிகாரிகளையும் நேரில் வரவழைத்து விசாரித்தது பிரதம அலுவலகம். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது. தங்களின் கட்டாய விடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிராமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராகேஷ் அஸ்தானா மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. மக்கள் மத்தியில் சிபிஐ-க்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றுவதற்காக ராகேஷ் அஸ்தானா மீது முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் அலோக் வர்மா.
மேலும் லஞ்சங்கள் வாங்கியது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதால், வழக்கு பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும், அஸ்தானாவிற்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கூடாது என்றும் அலோக் வர்மா சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அலோக் வர்மாவிற்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்