மாநிலங்களவை எம்.பி.யும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான அமர் சிங், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 64.
அமர் சிங் அவருடைய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் உள்ள தொடர்புகளுக்காகவும் அவரது நிர்வாக திறன் மற்றும் நிதி திரட்டும் திறன்களுக்காகவும் அறியப்பட்டது. அவர் அடிக்கடி பச்சன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அமர் சிங்தான் ஜெயா பச்சனை அரசியலுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
முலாயம்சிங் யாதவ் மற்றும் பச்சன் இரு குடும்பங்களுடனும் அவர் மிகவும் வெளிப்படையாக தொடர்பில் இருந்தார். பின்னர், அவர் இந்த இரண்டு பேர்கள் குறித்து கூறுகையில், 2017ம் ஆண்டில், அவர் சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதை பொருட்படுத்தமாட்டார் என்றும் ஆனால், முலாயம்சிங் இதயத்தில் இருப்பதாகவும் கூறினார். முன்னதாக இந்த ஆண்டு அவர் அமிதாப் பச்சனிடம் மன்னிப்பு கேட்டார்.
சமாஜ்வாடி கட்சியுடன் அமர் சிங்கின் உறவு 1996 முதல் 2010 வரை 14 ஆண்டுகள் நீடித்தது. இந்த காலகட்டத்தில், அவர் கட்சிக்காக விரிவான தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் அவர், அனில் அம்பானி முதல் பச்சன்கள் வரை, சஞ்சய் தத் முதல் சுப்ரதா ராய் வரை பிரபலங்களுடன் அடிக்கடி காணப்பட்டார்.
அமர் சிங் ஒரு நகர்ப்புற தலைவரானார். பெரும்பாலும் கிராமப்புறம் சார்ந்த சமாஜ்வாடி கட்சிக்கு இவர் குறிப்பாக டெல்லியில் தேவைப்பட்டார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இவரை கார்ப்பரேட் தாகூர் என்று கூறினார். டெல்லியில் உள்ள சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு நேர்த்தியைக் கொண்டுவந்தவர்.
அவர் சமாஜ்வாடி கட்சியில் ஓரங்கட்டப்பட்டபோது, பிரபல சமாஜ்வாடி தலைவர் ஜெய பிரதா அவருக்கு ஆதரவாக நின்றார். அவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் காங்கிரசில் சேருவது குறித்து செய்திகள் வந்தன. ஆனால், ஒரு காங்கிரஸ்காரர் அவர் கையாள்வதற்கு மிகவும் சிரமமானவர் என்று கூறினார்.
2011 ஆம் ஆண்டில், அவர் ராஷ்டிரிய லோக் மஞ்ச் கட்சியைத் தொடங்கினார். 2012 உத்தரப் பிரதேச தேர்தலில் 300க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால், அவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை. அமர் சிங் வெகுஜனத் தலைவராக இல்லாவிட்டாலும், தேர்தல் பிரசார கூட்டங்களில் கூட்டத்தை ஈர்த்தார். அவர் விரைவாக ராஷ்டீரிய லோக் தளம் கட்சியில் சேர்ந்து 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2016 ஆம் ஆண்டில் அவர் முலாயம்சிங்குடன் பிரச்னைகளை சரிசெய்துகொண்டு கட்சியில் சேர்ந்தார். அவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டார்.
அவர் 2017-ம் ஆண்டு மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர், அவர் பாஜகவில் சேருவார் என்று யூகங்கள் எழுந்தன. 2017 உத்தரப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அமர் சிங் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைப் பாராட்டினார். சட்டவிரோதமான இறைச்சி கடைகளை மூடுவதற்கும் ரோமியோ எதிர்ப்பு குழுக்களை அமைப்பதற்கும் அரசு எடுக்கும் முடிவுகளை வரவேற்றார்.
2018 ஆம் ஆண்டில், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரணாப் முகர்ஜி உரையாற்றிய பின்னர், ஆர்.எஸ்.எஸ் ஒரு சந்தர்ப்பவாத அமைப்பு அல்ல என்றும் மற்ற கட்சிகள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமர் சிங் கூறியிருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் அமிதாப் பச்சனை குறிப்பிட்டு, “வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான் வாழ்க்கை மற்றும் மரணப் போரில் சண்டையிடும் போது, அமித் ஜி மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான எனது அதீத எதிர்வினைக்கு வருந்துகிறேன். கடவுள் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.” என்று ட்வீட் செய்திருந்தார்.
அமர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடியும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, “அமர் சிங் வாழ்க்கையின் பல துறைகளிலும் அவரது நட்புக்காக அறியப்பட்டவர்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.