நந்தனா சென் தனது எக்ஸ் பக்கத்தில் அமர்த்தியா சென்னுடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை வெளியிட்டார். அவருடைய நலம் விரும்பிகளின் கவலைகளை ஒப்புக்கொண்டார். மேலும், 89 வயதான அவர் இன்னும் சுறுசுறுப்பாகவும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு இரண்டு படிப்புகளில் பிஸியாகவும் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Baba is totally fine’: Amartya Sen’s daughter, actor Nandana Sen shuts down fake death news
இந்தியப் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகள் நடிகை நந்தனா சென் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற கிளாடியா கோல்டினுடைய எக்ஸ் பக்கம் என்று குறிப்பிட்டு, ஒரு பதிவு அமர்த்தியா சென் இறந்துவிட்டதாகக் கூறியது, இந்த தகவல் அவரது குடும்பத்தினரால் மறுக்கப்பட்டது.
நந்தனா சென் தனது எக்ஸ் பக்கத்தில் அமர்த்தியா சென்னுடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை வெளியிட்டார். அவருடைய நலம் விரும்பிகளின் கவலைகளை ஒப்புக்கொண்டார். மேலும், 89 வயதான அவர் இன்னும் சுறுசுறுப்பாகவும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு இரண்டு படிப்புகளில் பிஸியாகவும் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
நந்தனா சென் எக்ஸ் பகத்தில், “நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி ஆனால் அது பொய்யான செய்தி: அப்பா நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான வாரத்தை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம் — நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அவரது அணைப்பு எப்போதும் போல் உறுதியாக இருந்தது! அவர் ஹார்வர்டில் வாரத்திற்கு 2 படிப்புகளை கற்பிக்கிறார், அவருடைய பாலின புத்தகத்தில் வேலை செய்கிறார் - எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார்!” என்று அவருடைய பதிவு இருந்தது.
இந்த செய்தியால் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் நலம் விரும்பிகள் இயல்பாகவே நிம்மதியடைந்தனர், நந்தனா சென்னின் பதிவுக்கு பலரும் பதிலளித்திருந்தனர். “இருண்ட கடைசி மணிநேரத்திற்குப் பிறகு இந்த ட்வீட்டைப் படிப்பதில் தனி மகிழ்ச்சி. நமது நாட்டின் மிகச்சிறந்த ஆன்மாக்களில் ஒருவருக்கு நல்வாழ்த்துக்கள்” என்று ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார்.
அவரது மரணம் குறித்து பதிவிட்ட கிளாடியா கோல்டினின் எக்ஸ் கணக்கில் பின்னர் ட்வீட் செய்யப்பட்டது. அதில், “இந்த கணக்கு இத்தாலிய பத்திரிகையாளர் டொமசோ டிபெனெடெட்டி-யால் உருவாக்கப்பட்ட புரளி” என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“