அரபிக்கடலின் அற்புதமான தோற்றம் பார்க்கணுமா…மீராமர் வாங்க!!!

அரபிக் கடலின் அற்புதமான தோற்றம் எளிதில் சொக்க வைத்து விடும். மீராமர் பீச்சில் சிறு உலா செல்வது இந்திரலோகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும்.

By: Published: May 13, 2019, 5:56:01 PM

கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது மீராமர் கடற்ரை. மீராமரில் இருந்து தெரியும் அரபிக் கடலின் அற்புதமான தோற்றம் எவரையும் எளிதில் சொக்க வைத்து விடும். அதன் காரணமாகவே இந்தக் கடற்கரைக்கு ‘கடலின் அழகிய தோற்றம்’ எனும் பொருள்படும்படி மீராமர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2 கிலோமீட்டர் பரப்பளவிலான மீராமர் பீச்சில் மாலையில் சிறு உலா செல்வது இந்திரலோகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும்.

நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகமாக வருகைதருவர். மீராமருக்கு அருகிலேயே டோனோ பெளலா, அக்வாடா கோட்டை உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கள் உள்ளன.
விமானப்பயணமாகவோ, சாலைமார்க்கமாகவோ, எளிதில் பனாஜியில் இருந்து மீராமரை அடையலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Amazing view of arabian sea go miramar beach in goa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X