Advertisment

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அம்பானி, அதானியை வணங்க வேண்டும்.. பாஜக எம்பி அல்போன்ஸ்!

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அம்பானி, அதானியை வணங்க வேண்டும்.. பாஜக எம்பி அல்போன்ஸ்!

author-image
WebDesk
New Update
bjp mp alphons

Ambani, Adani must be worshipped because they provide jobs says bjp mp alphons

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய, எதிர்க்கட்சிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே பரபரப்பான விவாதத்துக்கு மத்தியில், அம்பானி மற்றும் அதானி போன்ற தொழிலதிபர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதால் அவர்களை "வழிபட வேண்டும்" என்று வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவையில் பாஜக எம்பி ஒருவர் தெரிவித்தார்.

Advertisment

 “முதலாளிகளின் ஊதுகுழல் என்று நீங்கள் என்னைக் குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்கள்.  ரிலையன்ஸாக இருந்தாலும் சரி, அம்பானியாக இருந்தாலும் சரி, அதானியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வணங்கப்பட வேண்டும். ஆம், அவர்கள் வேலைகளை வழங்குவதால்…

பணத்தை முதலீடு செய்பவர்கள், அம்பானி, அதானி, இந்த நாட்டில் பணத்தை உருவாக்கும் ஒவ்வொரு தொழிலதிபரும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறார்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும்,” என மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜகவின் கேஜே அல்போன்ஸ் கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி அல்போன்ஸ், "உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் ஒரு உண்மை". இரண்டு பேரின் சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.

எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1016 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? கூகுள் நிறுவனர் லாரி பேஜின் சொத்து மதிப்பு 126 சதவீதம் உயர்ந்துள்ளது. பெசோஸின் சொத்து மதிப்பு 67 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த முதல் 10 இடங்களில் மிகக் குறைவானவர் பில் கேட்ஸ். அவரது சொத்து 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் உலகளாவிய சமத்துவமின்மை ஒரு உண்மை. உலகில் மூன்று பில்லியன் மக்கள்’ ஒரு நாளைக்கு ஐந்து டாலர்களுக்குக் கீழே வாழ்கின்றனர். எனவே, உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் ஒரு உண்மை,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த ஆர்ஜேடியின் மனோஜ் குமார் ஜா, இதை அரசாங்கம் “அமிர்த காலத்திற்கான பட்ஜெட்” என்று கூறியுள்ளது.

“கடந்த சில ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது... யாருக்கு அமிர்தம் கிடைக்கிறது, யாருக்கு விஷம் கிடைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அம்ரிதம் நண்பர்களுக்கானது. இது போதுமான அளவு வழங்கப்படுகிறது… ஆனால், பெரும்பாலான மக்கள் விஷத்தை மட்டுமே பெறுகிறார்கள்.

அரசிடம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை என்று கூறிய அவர், அரசாங்கம் வேலைவாய்ப்பு காலண்டரை வெளியிட வேண்டும். வேலையில்லாத இளைஞர்களின் பொறுமை மெதுவாக குறைந்து வருகிறது என்றார்.

BJD இன் சுஜீத் குமார், பட்ஜெட்டில் விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வாய்ப்பு பட்ஜெட் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது...

நாம் கல்வியைப் பற்றி உயர்ந்த விஷயங்களைப் பேசுகிறோம், ஆனால் இவ்வளவு உயர்ந்த இலக்குகள் இருந்தபோதிலும், கல்விக்காக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை மட்டுமே செலவிடுகிறோம்.

இந்த கூற்றுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவின் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், பட்ஜெட்’ நாடு எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய பொருளாதார வல்லரசாக நிலைநிறுத்தவும் தயாராக உள்ளது என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Rajya Sabha Unemployment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment