கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள பில்லியனர்களின் 36 வது வருடாந்திர தரவரிசை பட்டியலில் பல இந்தியர்கள் இடம்பிடித்தனர். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி, சமீபத்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிகள், அதானிகள், மிட்டல்கள் உட்பட பலர் இணைந்துள்ளனர்.
டாப் 10 பணக்கார இந்தியர்கள்
- முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் பத்தாவது பணக்காரராகவும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
- கௌதம் அதானி மற்றும் குடும்பம்
ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு $90 பில்லியன் ஆகும். அவர் உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ளார்.
- ஷிவ் நாடார்
HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனர் நாடார், இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவர். அவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் படி, அவரது நிகர மதிப்பு $28.7 பில்லியன் ஆகும். உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளார்.
4. சைரஸ் பூனவல்லா
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பூன்வாலாவின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. அவரது நிகர மதிப்பு 24.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. முந்தைய தரவரிசையுடன் ஒப்பிடுகையில், நான்கு இடம் முன்னேறியுள்ளார். உலக தரவரிசையில் 56வது இடத்தில் உள்ளார்.
- ராதாகிஷன் தமானி
உலக அளவில் 81வது இடத்தில் உள்ள தமானி, நாடு முழுவதும் டி-மார்ட்களை இயக்கும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்டை நிறுவியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் ஆகும்.
- லட்சுமி மிட்டல்
உலகின் மிகப்பெரிய எஃகு மற்றும் சுரங்க உற்பத்தி நிறுவனமான Arcelor Mittal இன் தலைவரான லட்சுமி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு $17.9 பில்லியன் ஆக உள்ளது.இவர் உலகளவில் 89 வது இடத்தில் உள்ளார்.
- சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம்
OP ஜிண்டால் குழுமத்தின் எஃகு மற்றும் சக்தி நிறுவனமான சாவித்ரியின் நிகர மதிப்பு $17.7 பில்லியன் ஆகும். இவர் உலக அளவில் 91வது இடத்தில் உள்ளது. மேலும், டாப் 10 பணக்கார இந்தியர்களில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆவர். அதேபோல், பில்லியனர்கள் பட்டியலில் உள்ள 13 இந்திய பெண்களில் ஒருவர் ஆவர்.
- குமார் பிர்லா
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் உலகளவில் 109 வது இடத்தில் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $16.5 பில்லியன் ஆகும்.
- திலீப் ஷங்வி
உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான திலீப் ஷங்வி, உலகளவில் 115 வது இடத்தில் உள்ளார்.அவரது சொத்து மதிப்பு $15.6 பில்லியன் ஆகும்.
- உதய் கோடக்
லிஸ்டில் கடைசியாக இருந்தாலும், குறைந்தவர் கிடையாது. கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குரான உதய் கோடக், உலகளவில் 129வது இடத்தில் உள்ளார். அவரது நிகர மதிப்பு $14.3 பில்லியன் ஆகும். அவரை “India’s richest self-made banker” என ஃபோர்ப்ஸ் அழைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.