Advertisment

ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகல்... அம்பதி ராயுடு திடீர் முடிவு!

இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த வியாழக்கிழமை இணைந்தார்.

author-image
WebDesk
New Update
 Ambati Rayudu quits YSRCP after One week of joining and takes break from politics Tamil News

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அம்பதி ராயுடுவை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ambati Rayudu: ஆந்திரப் பிரதேசம் மாநில குண்டூரைச் சேர்ந்தவர் அம்பதி ராயுடு. முன்னாள் இந்திய வீரரான இவர் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் 55 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்களும், 6 டி20 போட்டிகளில் 42 ரன்களும் எடுத்தார். 204 ஐ.பி.எல் போட்டிகளில் 4348 ரன்களை எடுத்துள்ளார்.

Advertisment

அவரது 13 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வாழ்க்கையில், ராயுடு 2010 முதல் 2017 வரையிலான மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) அணிக்காக விளையாடினர். அதன்பிறகு, 2018 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினர். சென்னை அணியால் அவர் 2022ம் ஆண்டில் 6.75 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டார்.

2023ம் ஆண்டு இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்திய நிலையில், அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு-வுக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியா பிரியாவிடை கிடைத்தது. 2023 சீசனுடன் அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

அரசியலில் கால் பதித்த சி.எஸ்.கே வீரர்

இந்நிலையில், இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த வியாழக்கிழமை (டிச.28) இணைந்தார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார். 

ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகல் 

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒரே வாரத்திலே அக்கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவை வெளியிட்டுள்ளேன். மேலும் நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். நன்றி." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ambati Rayudu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment