ஆம்புலன்சில் பிரசவம்; குழந்தை மரணம்: முஸ்லிம் என்பதால் மருத்துவமனை துரத்தியதாக புகார்

ராஜஸ்தானில் முஸ்லிம் என்று தெரிந்ததால் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை இறந்ததாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By: Published: April 5, 2020, 2:02:53 PM

ராஜஸ்தானில் முஸ்லிம் என்று தெரிந்ததால் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை இறந்ததாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக இர்ஃபான் கான் என்பவர் தனது மனைவியை சனிக்கிழமை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் அவர் முஸ்லிம் என்று தெரிந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் ஜெய்பூருக்கு அனுப்பியதாகவும் அதனால், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது. இரண்டாவது முறையாக மீண்டும் மருத்துவமனைக்கு சென்றபோது ஆம்புலன்ஸில் குழந்தை உயிரிழந்தது. இதற்கு காரணம் மருத்துவர்கள் தான் முஸ்லிம் என்று தெரிந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அனுப்பியதுதான் காரணம் என்று இர்ஃபான் கான் புகார் கூறியுள்ளார். இந்த சம்பவம், அம்மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் மாநில மருத்துவக்கல்வித் துறை அமைச்சரும், பரத்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வுமான சுபாஷ் கார்க் கூறுகையில், அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் அந்த குடும்பத்தினரை ஜெய்ப்பூருக்குச் செல்லுமாறு கூறப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த சம்பவம் நடந்த பரத்பூர் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரச்னா நாராயணனை இந்தியன் தொடர்பு கொண்டு பேசியது. அதற்கு அவர், இர்ஃபான் கானின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மருத்துவிட்டார். மேலும், இதற்கு மருத்துவக்கல்வித் துறை செயலாளர்தான் கருத்து தெரிவிக்க சரியான நபர் என்று கூறினார்.

அம்மாநில மருத்துவக்கல்வித் துறை செயலாளர் வைபவ் கல்ரியா இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுள்ளது. இந்த புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தும். தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைபவ் கல்ரியா கூறினார்.

மேலும், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று கூறிய அமைச்சர் சுபாஷ் கார்க், “இந்த குற்றச்சாட்டுகள் நோயாளியின் உறவினர் அளித்த அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

அந்த பெண்ணின் கணவர் இர்ஃபான் கான் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், தனது மனைவியை அணுகிய மருத்துவப் பணியாளர்கள், தான் தனது கர்ப்பினி மனைவியுடன் தப்லிக் ஜமாஅத் உடன் தொடர்புகொண்டிருக்கலாம் என சந்தேகித்தனர் என்று கூறினார்.

குழந்தை இறந்ததற்கு மருத்துவமனை ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என இர்ஃபான் கான் கூறிய நிலையில், பரத்பூரில் உள்ள டீக்-கும்ஹர் தொகுதியின் எம்.எல்.ஏவும், மாநில அமைச்சரவைத் தலைவருமான விஸ்வேந்திர சிங், இது ஒரு “வெட்கக்கேடான” சம்பவம் என்று கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டரில், “கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது வெட்கக் கேடானது. (தப்லிக்) ஜமாஅத் நிச்சயமாக ஆபத்தானதாக இருக்கிறது. இஸ்லாமிய நம்பிக்கை பின்பற்றும் குடிமக்கள் இந்த கர்ப்பிணிப் பெண்ணை நடத்தியதைப் போலவே நடத்தப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல…” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் இர்ஃபான் கான் கூறுகையில், “நாங்கள் நேற்று இரவு சிக்ரியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குச் சென்றபோது, ​​அவர்கள் எங்களை மாவட்ட மருத்துவமனைக்குச் செல்லச் சொன்னார்கள். நாங்கள் இன்று காலை பரத்பூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். லேபர் அறையில், மருத்துவர்கள் எனது பெயரையும் முகவரியையும் கேட்டார்கள். எனது பெயரை அவர்களிடம் சொன்னேன், நான் நாகரில் இருந்து வந்திருக்கிறேன் என்றேன். அவர்கள் என்னிடம் நான் முஸ்லீம் தானா கேட்டார்கள். நான் ஆமாம், என்றேன். டாக்டர்கள் உஷாராகி (நீங்கள் முஸ்லீமாக இருந்தால்), நீங்கள் இங்கு எந்த சிகிச்சையும் பெறமாட்டீர்கள் என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய இர்ஃபான் கான், “அவர்களில் ஒருவர், இவர் நாகரிலிருந்து வந்த ஒரு முஸ்லிம், ஒரு பரிந்துரை அட்டைக் கொடுத்து அவர்களை இங்கிருந்து அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார். அதற்கு முன்பு மருத்துவர்கள் தங்களுக்குள் விவாதித்ததை தான் கேட்டேன்… இதையடுத்து, ஜெய்பூருக்குச் செல்லும் வழியில் எனது மனைவி ஆம்புலன்ஸில் பிரசவித்தார். நான் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால், அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அதற்குள் குழந்தை இறந்துவிட்டது.” என்று துயரத்துடன் இர்ஃபான் கான் கூறினார். இதன் பின்னர், இர்ஃபான் கானின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ambulance delivery newborn infant dies father allegation hospital drove them off for being muslim

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X