Advertisment

2024 மக்களவை தேர்தல்: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்: 'ஊழல் கூட்டணி' என பாஜக தாக்கு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுத்ததாக சிம்லாவில் கூடி முன்னணியின் முறைகளை இறுதி செய்வார்கள் என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Amid Cong vs AAP Oppn leaders agree to fight BJP together in 2024 Lok Sabha polls

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நிதிஷ் குமார், ராகுல் காந்தி

2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆளும் பாஜகவுக்கு எதிராக பொது கூட்டணி அமைப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.

Advertisment

இதைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய நிலவரத்தை எதிர்த்து அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து போராட ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிம்லாவில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில், கூட்டணியின் வழிமுறைகள் இறுதி செய்யப்படும்.

கூட்டத்தின் போது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

இந்த சந்திப்பிற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை "புகைப்பட அமர்வு" என்று அழைத்தார். மேலும், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருபோதும் ஒன்றிணைக்க முடியாது என்று கூறினார்.

பாஜக எம்பி சுஷில் மோடி, “நாட்டை முட்டாளாக்க தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லை. அனைவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aam Aadmi Party Bjp Congress Nitish Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment