கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் துவக்கம்

. முறையே தடுப்பூசி இருப்பு மற்றும் பயன்பாடு குறித்த மதிப்பீட்டினை அறிந்து விநியோகத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சிக்க வேண்டும்.

. முறையே தடுப்பூசி இருப்பு மற்றும் பயன்பாடு குறித்த மதிப்பீட்டினை அறிந்து விநியோகத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Amid Covid surge third vaccination round rolls out today for key group

 Kaunain Sheriff M

Amid Covid surge, third vaccination round rolls out today for key group : இந்தியாவில் கொரோனா தொற்று 5.52 லட்சத்தை நெருங்கியிருக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மூன்றாம் கட்ட தடுப்பூசி புதன்கிழமை வெளியாக உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள்.

Advertisment

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொடுக்க ஆரம்பித்து இரண்டரை மாதங்கள் ஆகியிருக்கின்ற நிலையில் இந்த சுற்று தடுப்பூசி, சுற்றுவாரியாக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி மேலாண்மையில் இந்த கட்டம் அதிக அளவு பயனாளர்களை கொண்டிருக்கிறது. அதிக ஆபத்தில் இருக்கும் மக்கள் தொகையினருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த 90% நபர்கள் இந்த வயதை சேர்ந்தவர்கள்.

மொத்தம் 5.52 லட்சம் வழக்குகளில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் 79.30 சதவீத வழக்குகள் உள்ளன. 61% என்ற விகிதத்தில் மகாராஷ்ட்ரா இதில் முன்னிலை வகுக்கிறது.

புதன்கிழமை அன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ் பூஷன் கோவிட் தடுப்பூசி தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். சர்மா ஆகியோர், மூன்றாம் கட்டத்திற்கான ஆயத்தங்கள் குறித்து மாநில சுகாதார செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார மிஷனின் மிஷன் இயக்குநர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் அதே நேரத்தில் மிகவும் குறைவான அளவில் கொரோனா தடுப்பூசியை பெறும் பிராந்தியங்கள் குறித்து நேற்று பேசப்பட்டது.

Advertisment
Advertisements

45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் 100% தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று பூஷனின் அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. தொற்றில் விரைவான வளர்ச்சியைக் கொண்ட அனைத்து மாவட்டங்களும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசியை வரவிருக்கும் இரண்டு வாரங்களில் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அவர் கூறினார்.

publive-image

தடுப்பூசியின் சரக்கு குறித்து மூன்று முக்கியமான விஷயங்களை உயரதிகாரிகள் மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தினார். தடுப்பூசி சேமிப்பில் எந்த மட்டத்திலும் செடிமெண்டுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக தேவைக்கேற்ற அளவிற்கு தடுப்பூசி இருப்பு வேண்டும். சிவிசிக்களில் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது. முறையே தடுப்பூசி இருப்பு மற்றும் பயன்பாடு குறித்த மதிப்பீட்டினை அறிந்து விநியோகத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சிக்க வேண்டும்.

16.53 சதவீதம் தடுப்பூசிகள் மட்டுமே தனியார் துறையினரால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகள் அதிகபடியான தனியார் துறையின் பங்கினை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தியா ஜனவரி 16 ஆம் தேதி அன்று முதல் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பித்தது. 6,43,58,765 தடுப்பூசி டோஸ்கள் முதல் 75 நாட்களில் வழங்கப்பட்டன. இது சுகாதாரத்தை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 82,47,288 முதற்கட்ட டோஸ்களையும், 52,38,705 இரண்டாம் கட்ட டோஸ்களையும் உள்ளடக்கியது. 91,34,627 முதற்கட்ட டோஸ்கள் முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. 39,23,172 இது முன்கள பணியாளர்கள் பெற்ற இரண்டாம் கட்ட டோஸ்களாகும். மேலும்
300,39,599 முதற்கட்ட டோஸ்களை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர். 86,869 இது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்ற இரண்டாம் டோஸின் எண்ணிக்கை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76,74,934 நபர்கள் முதல்கட்ட டோஸ்களை பெற்றுள்ளனர். 13,571 நபர்கள் இரண்டாம்கட்ட டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: