டெல்லியில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால் தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் தண்ணீரைத் திறந்துவிட ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்துக்கு அவசர வழிகாட்டுதல்களைக் கோரி டெல்லி அரசு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இது குறித்து ஆம் ஆத்மி, “டெல்லியில் வெப்பம் 50 டிகிரிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீரின் தேவையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த மனுவில், “எங்களின் நோக்கம் மாநிலத்துக்கு உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என சச்சரவு செய்வது அல்ல; தற்போது கோடை வெப்பம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. தேவை அதிகரித்ததால்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இந்த அவசர நிலையில் ஓர் அவசர தீர்வு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசம் தனது உபரி நீரை டெல்லியுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக ஆம் ஆத்மி அரசு கூறியது. இதற்கு ஹரியானா அரசின் வசதியும் ஒத்துழைப்பும் தேவைப்படும், அது தற்போது வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
தற்போது, சோனியா விஹார் மற்றும் பாகீரதி தடுப்பணைகளில் உள்ள நீர் நிலைகள், டெல்லி
தற்போது, சோனியா விஹார் மற்றும் பாகீரதி தடுப்பணைகளில் உள்ள நீர் நிலைகள், டெல்லிக்கு முக்கிய நீராதாரமாக உள்ளன. தற்போதுள்ள நிலையில், நீர் வழங்கல் அதிகரிப்பு மட்டுமே சாத்தியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே ஹரியானா அரசிடம் இந்த பிரச்சனையை எழுப்பியதாகவும், வசிராபாத் தடுப்பணையில் உபரி நீரை திறந்து விடுமாறு வலியுறுத்தியதாகவும் ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது.
இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேச அரசுகள் டெல்லி மக்களுக்கு இந்த பிரச்சினையில் அரசியல் செய்வதற்கு பதிலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ““இதை நாம் அனைவரும் சேர்ந்து தீர்க்க வேண்டும். பாஜக சகாக்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை நான் காண்கிறேன். இதனால் பிரச்னை தீர்ந்துவிடாது. இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், அனைவரும் ஒன்றிணைந்து டெல்லி மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று அனைவரையும் கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹரியானா மற்றும் உ.பி.யில் உள்ள பாஜக அரசுகளுடன் பேசி, டெல்லிக்கு ஒரு மாதத்திற்கு தண்ணீர் கிடைத்தால், பாஜகவின் இந்த நடவடிக்கையை டெல்லி மக்கள் பெரிதும் பாராட்டுவார்கள். இத்தகைய கொளுத்தும் வெப்பம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இதிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதா? எனவும கோரியுள்ளார்.
இதையடுத்து, நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ளதையும், டெல்லி எவ்வாறு சமாளிக்கிறது என்பதையும் கெஜ்ரிவால் எடுத்துரைத்தார். “கடந்த ஆண்டு, டெல்லியின் உச்சபட்ச மின் தேவை 7438 மெகாவாட்டாக இருந்தது. ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உச்ச தேவை 8302 மெகாவாட்டை எட்டியுள்ளது. இருப்பினும், டெல்லியில் மின் நிலைமை கட்டுக்குள் உள்ளது, மற்ற மாநிலங்களில் மின்வெட்டு இல்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.