மோடி- ஜின்பிங் நவம்பரில் சந்திப்பு: லடாக் மோதலுக்குப் பிறகு முதல் முறை

ரஷ்யா 12வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டு தேதியை திங்கள்கிழமை முறையாக அறிவித்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் காணொளி வழியாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

narendr modi xi meet, brick summit, xi Jinping, india china meet, பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி ஷி ஜின்பிங் பங்கேற்பு, ரஷ்யா, india china border dispute, Modi Xi Jinping to attend birics summit in nov, birics summit, russia announced brics smummit, லடாக் மோதல், tamil indian express

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் நவம்பர் 17ம் தேதி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் லடாக் எல்லையில் மோதல் தொடங்கியதில் இருந்து, பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளும்போது இருதலைவர்களும் முதலில் என்ன உரையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது பிரிக்ஸ் மாநாட்டுக்கு ரஷ்யா தலைமை வகிக்கிறது. பிரேசில், ரஷ்யாவும் 12வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் காணொளி வழியாக கலந்துகொள்ளப் போகிறார்கள்.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 18 முறை சந்தித்துள்ளார்கள். எல்லை மோதல் சம்பவத்தில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசவோ சந்திக்கவோ இல்லை.

பிரிக்ஸ் உச்சி மாநாடு நவம்பர் 17ம் தேதிக்கு முன்னர் இரு தலைவர்களுக்கிடையில் எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி அழைப்பும் திட்டமிடப்படவில்லை என்றாலும், உரையாடலுக்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

மார்ச் 26ம் தேதி சவுதி அரேபியா கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக ஜி-20 தலைவர்களின் மிகச் சிறந்த காணொளி கூட்டத்தை நடத்தியபோது அவர்கள் கடைசியாக ஒரு தளத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

உண்மையில், நவம்பர் 21-22 தேதிகளில் ஜி-20 தளத்தை – காணொளி வழியாகவும் பகிர்ந்து கொள்ள மோடி மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜி -20 உச்சி மாநாடு நடைபெறும்.

நவம்பர் 17ம் தேதிக்கு முன்னர் இரு தரப்பினரும் பிரச்சினையை தீர்க்க விரும்புவதால், பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் திட்டமிடல்கள், இந்த மோதலைத் தீர்க்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மோதல் தொடங்கி 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கடந்த மாதம் மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் துருப்புகளை பின்வாங்க நிலைமையைக் குறைக்க 5 பக்க அணுகுமுறையை பின்பற்றினர். ஆனால் அதன்பிறகு துருப்புகளை பின்வாங்கச் செய்வதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இருப்பினும், எந்தவித விரிவாக்கமும் இல்லை. துருப்புகளை பின்வாங்கச் செய்வதற்கான எண்ணம் வரவிருக்கும் வாரங்களில் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று ஒரு வட்டாரம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.

தற்செயலாக, இந்தியா மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையேயான இரண்டரை மாத கால டோக்லாம் எல்லை மோதல் செப்டம்பர் 2017ம் தேதி ஷியாமெனில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சற்று முன்னர் தீர்க்கப்பட்டது.

அகமதாபாத்திற்கு வருகை தந்த ஷி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி பிரச்சினையை எழுப்பிய பின்னர், 2014 செப்டம்பரில் சமர் மோதல் முடிவுக்கு வந்தது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை அறிவித்த ரஷ்யா, இந்த ஆண்டு கூட்டத்தின் கருப்பொருள் “உலகளாவிய ஸ்திரத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சிக்கான பிரிக்ஸ் கூட்டு” என்பதாகும்.

மேலும், அது, ஐந்து நாடுகளும் “அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், நிதி, கலாச்சார மற்றும் மக்களுக்கு மக்கள் பரிமாற்றம் ஆகியவை மூன்று முக்கிய தூண்கள் என்றும் நெருக்கமான உத்தி கூட்டாண்மை” தொடர வேண்டும் என்று கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amid india china border standoff pm modi chinese president xi jinping to attend brics summit in november

Next Story
ஆதித்யநாத் அரசின் புகழைக் கெடுக்க சர்வதேச சதி – ஹத்ராஸ் போலீஸ் குற்றச்சாட்டுhathras gang rape, hathras rape, hathras dalits, yogi adityanath, ஹத்ராஸ் பாலியல் கொலை, உத்தரப் பிரதேசம், யோகி ஆதித்யநாத், uttar pradesh, hathras thakurs, hathras case, india news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express