கடந்த ஒரு மாதங்களாக இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரமடைந்துள்ளது.
லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன துருப்புக்களுக்கு இடையிலான பதட்டமான சூழல் 11 வாரங்களாக நீடித்து வரும் நிலையில், இந்தியா- அமெரிக்கா மத்தியில் தகவல் தொடர்பு மற்றும் இதர தொடர்புகள் சத்தமில்லாமல் மேம்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஆர் பாம்பியோ தொலைபேசியில் உரையாடிய பின்னர், தற்போதைய ஒத்துழைப்புக்கு முக்கியமாக குறைந்தது இரண்டு உயர்மட்ட தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்கா பாதுக்காப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ’பிரையனுடன் உரையாடினார் என்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அறிந்திருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவத் தலைவர் ஜெனரல் மார்க் ஏ. மில்லி, பாதுகாப்புப் படைத்தலைவர் பிபின் ராவத் ஆகியோருக்கு இடையே கடந்த சில வாரங்களாக உரையாடல்கள் நடைபெற்றன.
இந்த உயர்மட்ட உரையாடல்கள், இரு நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்புக்கு தேவையான தகவல் மற்றும் அதிக அளவிலான உளவுத்துறை பகிர்வு குறித்த கட்டமைப்பை உருவாக்க உதவியுள்ளன.
கடந்த திங்களன்று, யு. எஸ் நிமிட்ஸ் போர்க்கப்பலும், இந்திய போர்க்கப்பல்களும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன. தாராளமான மற்றும் திறந்த இந்திய - பசிபிக் சூழலை உருவாக்கும் நோக்கில், இந்தியப் பெருங்கடலில் நிமிட்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
உண்மையில் பாம்பியோ - ஜெய்சங்கர் இடையிலான தொலைபேசி உரையாடல் தான் அனைத்திற்கும் களம் அமைத்து கொடுத்ததாக அரசியல் வாட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்த, உரையாடல் பாதுகாப்புத்துறையில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்புக்குத் தேவையான அரசியல் உந்துதலைக் கொடுத்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜூலை இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர், இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
உயர்தர செயற்கைக்கோள் படங்கள், தொலைபேசி இடைமறிப்பு, சீன துருப்புக்கள் குறித்த விவரங்கள் , எல்லைக் கட்டுப்பாடு கோடு நெடுகே சீனாவின் ஆயுத பலம் ஆகிய தகவல்கள் இந்த ஒத்துழைப்பின் கீழ் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எல்லைப் பகுதி நெடுகே அனைத்து செக்டாரிலும் சீன துருப்புகளின் இயக்கங்களை புது டெல்லி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரவித்தன.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் இந்திய பாதுகாப்புத்துறையின் திறனை மேம்படுத்தியுள்ளன. கிழக்கு லடாக்கில் இந்திய ஆயுதப்படைகள் குறைந்தது ஐந்து அமெரிக்க தளங்களை பயன்படுத்துகின்றன: சி-17ஏ குளோப்மாஸ்டர்- 3, சிஎச் 47எப் (ஐ) சினூக் பல்நோக்கு ஹெலிகாப்டர்கள், ஏஎச்-64இ ரக ஹெலிகாப்டர்கள், பி -8 ஏ போஸிடான் விமானங்கள், C -130J ரக சூப்பர் ஹெர்குலஸ் ஆகியவை இந்த பட்டயலில் அடங்கும்.
ஜூலை 5 ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, ஜெய்சங்கருடன் பாம்பியோ பேசியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.