கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஆளுநர் ஆரிப் முகம்மது கான் ட்விட்டரில், “
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆளுநர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் தனிப்பட்ட அமைச்சர்களின் அறிக்கைகள் இருந்தால் அவர்களை பதவி நீக்க அழைப்பு விடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார். ஆளுநர் நினைத்தால் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரலாம்.
ஆளுநர் ஆரிப் முகம்மது கானின் இந்தக் கோபத்துக்கு பின்னால் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர். பிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்த மசோதா கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது.
இது குறித்து பிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்மொழியப்பட்ட இந்த மசோதா தன்னாட்சி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சில பாதுகாப்புகளுக்கான விதிகளை வகுத்துள்ளது.
இதில், அவருக்கு (கவர்னர்) ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் குறிப்பிட்டு மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கலாம். மாறாக கைவிட்டுள்ளார்.
அவர் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமான பொறுப்பு” எனத் தெரிவித்திருந்தார்.
கேரள அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் கேரளப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்த 15 பேர் வாபஸ் பெறப்பட்டனர்.
தொடர்ந்து செனட் உறுப்பினர்கள் மீது ஆரிப் முகம்மது கான் சாட்டையை சுழற்றினார்.
முன்னதாக, கான் செனட் வேட்பாளர் இல்லாமல் ஒரு தேடல் குழுவை அமைத்தார். குழுவில் செனட்டில் இருந்து ஒரு நியமனம் இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சட்டம் கட்டளையிடுகிறது.
சிபிஐ(எம்)-ஆதிக்கம் பெற்ற செனட்டில் இருந்து வேட்பாளருக்கான பரிந்துரை எதுவும் இல்லாததால், கான் இரண்டு பேர் கொண்ட குழுவை மட்டும் அறிவித்தார்.
இதற்கிடையில், புதிய மசோதா துணை வேந்தர் தேர்வில் அவரது மேலாதிக்கத்தை பறிக்கும் என்பதால் ஆரிப் முகம்மது கான் செயல்முறையை விரைந்து முடித்தார் என்று சிபிஐ(எம்) குற்றஞ்சாட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“