Advertisment

தொடர் விலை ஏற்றத்தால், துருக்கியில் இருந்து 11,000 டன் வெங்காயத்தை வாங்க அரசு முடிவு

வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் , துருக்கியில் இருந்து 11,000 மெட்ரிக் டன் (எம்டி) வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தொடர் விலை ஏற்றத்தால், துருக்கியில் இருந்து 11,000 டன் வெங்காயத்தை வாங்க அரசு முடிவு

வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால், துருக்கியில் இருந்து 11,000 மெட்ரிக் டன் (எம்டி) வெங்காயத்தை இறக்குமதி செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு எம்எம்டிசியிடம்  (அரசு நிறுவனம்) நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

Advertisment

சமீபத்திய  தகவலின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் டிசம்பர் பிற்பகுதியில் இருந்து (அல்லது) ஜனவரி முதல் வாரத்  தொடக்கத்தில் இந்தியாவுக்குள் வரத் தொடங்கும்.

எகிப்திலிருந்து தற்போது இறக்குமதி செய்துவரும் 6,090 மெட்ரிக் டன் வெங்காயத்துடன், டிசம்பர் நடுப்பகுதியில் இன்னும் கூடுதலாக  11,000 மெட்ரிக் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

முன்னதாக, நவம்பர் 9 ம் தேதி, வெங்காயத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யுமாறு எம்.எம்.டி.சிக்கு அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. எம்.எம்.டி.சி நிறுவனம்  ஈரான், ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளிலுள்ள இந்திய நாட்டு தூதரகங்களை வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான எளிமையான சூழலை உருவாக்குங்கள் என்ற  குடைச்சலையும்  கொடுத்திருக்கிறனர்.

 

 

முன்னதாக, மோசமான வானிலை மற்றும் பருவநிலை காரணமாக வெங்காய உற்பத்தியில் கடும் பற்றாக்குறையை  சந்தித்தது. முக்கிய நகரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ .75-120 ஆக உயர்ந்த விலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 120,000 டன்  வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. மேலும், தேசிய விவசாய கூட்டுறவு சந்தை நிறுவனத்தை (NAFED) ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து உபரி வெங்காயத்தை  கொள்முதல் செய்து பற்றாக்குறை மாநிலங்களில் விநியோக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர், ராம் விலாஸ் பாஸ்வான் கடந்த நவம்பர் 19ம் தேதியன்று  மக்களவையில் கேள்வி நேரத்தில் பதில் தெரிவிக்கையில்,"அறுவடை காலத்தில் (அதாவது செப்டம்பர் / அக்டோபர்)  நீடித்த மழையால் வெங்காய உற்பத்தியில் முக்கிய மாநிலங்களாக திகழும் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வெங்காய பயிர்கள் சேதம்  அடைந்தன. இதனால், சந்தையில் காரீப் வெங்காயத்தின் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையிலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது" என்றார்.

அவர் மேலும் கூறியதாவது,“நடப்பு ஆண்டில், கரீஃப் மற்றும்  லேட் காரீஃப் வெங்காயத்தின் உற்பத்தி 52.06 லட்சம் மெட்ரிக் டன், இது முந்தைய ஆண்டு உற்பத்தியை விட 26 சதவீதம் குறைந்துள்ளது" என்றார்.

மத்திய அரசு ஏற்கனவே வெங்காயத்தை ஏற்றுமதியை  தடைசெய்வதையும்,  மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வெங்காயத்தை தங்கள் கட்டுப்பட்டுக்குள் வைத்திருக்கும் கால வரம்பையும் நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment