Advertisment

சாவர்க்கருக்கு ‘வீர’ பட்டம் எந்த அரசும் கொடுக்கவில்லை… மக்கள் அளித்தது - அமித்ஷா

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் தனிமை சிறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர் அங்கே அடுத்த இரண்டு நாட்களுக்கு வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறார்.

author-image
WebDesk
New Update
Amit Shah, Andaman jail, Savarkar history, அமித்ஷா, அந்தமான் சிறை, சாவர்க்கர், வீர சாவர்க்கர், Savarkar, india

விநாயக் தாமோதர் சாவர்க்கரை அவமதிப்பதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்துத்துவா சின்னமான தேசபக்தியை மக்கள் கேள்விக்குள்ளாக்குவது வேதனை அளிக்கிறது. சாவர்க்கரின் தைரியத்தையும் தேசபக்தியையும் அங்கீகரிக்கும் விதமாக 130 கோடி இந்தியர்களால் அவருக்கு ‘வீர’ பட்டம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

Advertisment

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பிரிட்டிஷ் கால போர்ட் பிளேர் தனிமை சிறையில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா பேசினார். அங்கே அவர் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறார்.

வீர சாவர்க்கருக்கு ‘வீர’ என்ற பட்டத்தை எந்த அரசும் வழங்கவில்லை. ஆனால், 130 கோடி இந்தியர்கள் அவரது தைரியத்தையும் தேசபக்தியையும் அங்கீகரிக்கும் விதமாக வழங்கினர். அவரது வாழ்க்கை குறித்து இன்று சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது. இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் தேசபக்தியை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி பிரான்சுக்கு செல்ல முடிவு செய்தவரின் தைரியத்தை நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். 30 பவுண்டுகள் எண்ணெயை (ஒரு நாளைக்கு) கையால் செக்கு இழுத்து தயாரித்த கொடுமையை அனுபவித்தவர். அவரை விமர்சிப்பவர்களுக்கு வெட்கம் இருக்கிறதா? இங்கே வந்து பாருங்கள், நீங்கள் இனி இந்தக் கேள்விகளைக் கேட்க மாட்டீர்கள்” என்று அமித்ஷா கூறினார்.

அமித்ஷாவின் கருத்துப்படி கடந்த முறை அவர் இந்த சிறைக்குச் சென்றபோது, தூங்கா விளக்கில் இருந்து வீர சாவர்க்கரின் பெயர் நீக்கப்பட்டது. அவர் அதை மீண்டும் அங்கு வைத்தது என்றார்.

“இன்று வீர சாவர்க்கரை நினைவு கூறாமல் நாம் எப்படி கடந்து போக முடியும். சாவர்க்கர் இந்த சிறையை ஒரு புனித யாத்திரை இடமாக்கினார். நீங்கள் எவ்வளவு கொடுங்கோன்மையை கட்டவிழ்த்து விட்டாலும், என் உரிமைகளும் எனது நாட்டின் சுதந்திரத்தையும் நீங்கள் பறிக்க முடியாது என்று அவர் இந்தியா முழுமைக்கும் ஒரு செய்தியைக் அளித்தார். நான் அவருடைய சிறை அறைக்கு சென்றேன். வலதுபுறம் தொங்கும் வீடு, எண்ணெய் ஆலை மற்றும் சவுக்கு உள்ளது. யாருக்கும் தெரியாது, 10 ஆண்டுகளில், சாவர்க்கர்ஜி எவ்வளவு கொடுமையை இங்கே சகித்திருக்க வேண்டும். அந்த 10 ஆண்டுகளில் அவர் சுதந்திரப் போராளிகளின் தூக்கிலிடப்பட்ட உள் குரல்களையும் கேட்டிருக்க வேண்டும். ஆனாலும், அவர் சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து உறுதியுடன் இருந்தார்” என்று அமித்ஷா கூறினார்.

சாவார்க்கர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தார். ஆனால் , தனது வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தார் என்று அமித்ஷா கூறினார்.

“அவர் ஒரு அறிவுஜீவி மனிதர், நன்கு படித்த பல மொழிகளை அறிந்தவர், உருது மொழியில் அவருடைய கவிதையை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர் ஒரு சிறந்த மொழியியலாளர், ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி, ஒரு சிறந்த சுதந்திர போராட்ட வீரர், ஒரு சிறந்த பேச்சாளர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் 1857ல் ஒரு புத்தகம் எழுதினார், அனேகமாக வெளியிடப்படுவதற்கு முன்பே தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் அதுவாக இருக்கலாம். அத்தகைய சிந்தனையாளர், எழுத்தாளர், தைரியம் கொண்டவர் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்” என்று அமித்ஷா கூறினார்.

உள்துறை அமைச்சர் இந்த தனிமைச் சிறைக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு புது சக்தியைப் பெறுவதாக கூறினார். மேலும், சொல்லமுடியாத கொடுமைகளை அனுபவித்த போதிலும், சிறையில் உள்ள 1,000 சுதந்திரப் போராளிகள் பிரிட்டிஷாரின் முன் தலைவணங்கவில்லை, இறுதியில் வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டு வீடு திரும்பினார்கள் என்று கூறினார்.

“இந்த தியாகிகள் எங்கிருந்தாலும், அவர்கள் உண்மையில் திருப்தி அடைய வேண்டும். இப்போது நாடு தேர்ந்தெடுத்துது கடந்த 7 ஆண்டுகளாக நடந்து செல்லும் பாதை சாவர்க்கர் மற்றும் சச்சின் சன்யால் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டிற்காக கற்பனை செய்த பாதை” என்று அமித்ஷா கூறினார்.

அமித்ஷா சன்யாலின் சிறை அறைக்கு சென்றபோது உணர்ச்சிவசப்பட்டார் என்றார். "தனிமைச் சிறைக்கு இரண்டு முறை அழைத்து வரப்பட்ட ஒரே சுதந்திரப் போராட்ட வீரர் சச்சின் சன்யால் மட்டுமே. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மேற்கு வங்கம் ஒரு சிறப்புப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. பெங்கால் மற்றும் பஞ்சாப் மட்டுமே அதிகபட்சமாக சுதந்திரப் போராட்ட வீரர்களை இங்கு அனுப்பியுள்ளன. சன்யால் திரும்பிச் சென்றபோது, ​​அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அவர் மீண்டும் இங்கு அழைத்து வரப்பட்டார். இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என்று அமித்ஷா கூறினார்.

அறியப்படாத பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை இளைஞர்கள் அறிந்து கொள்ளவும், தேசபக்தி உணர்வை மீண்டும் வளர்க்கவும் ஆசாதி கா அமிர்த மஹோத்ஸாவைக் கொண்டாட பிரதமர் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

2018ம் ஆண்டில், நீர்மூழ்கிக் கப்பல் ஆப்டிகல் ஃபைபர் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். 2020ல் அதைத் தொடங்கி வைத்தார். மோடி ஒரு போக்கைத் தொடங்கியுள்ளார். இங்கே நாங்கள் தொடங்கி வைத்த திட்டத்தை அதை மட்டுமே முடிக்கிறோம். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் முதலில் சுதந்திரம் பெற்றன. 1943ல், நேதாஜி இங்கு இந்தியக் கொடியை ஏற்றி வைத்தார்” என்று அமித்ஷா கூற்னார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Amit Shah Andaman Nicobar Island
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment