/indian-express-tamil/media/media_files/d0Pn9rRDb99UZPP9QMv1.jpg)
அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது, அதை மாற்றி எழுதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
jammu-and-kashmir | காஷ்மீர் விவகாரத்தில் ஜவஹர்லால் நேருவை குறிவைத்து ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்கிழமை (டிச.12) கடுமையான பதிலடி கொடுத்தார், மேலும் பாஜக தலைவருக்கு வரலாறு தெரியாது என்றும் அதை தொடர்ந்து "திருத்தி எழுதுகிறார்" என்றும் கூறினார்.
இது குறித்து ராகுல் காந்தி, “பண்டித நேரு தனது வாழ்க்கையை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த அமித் ஷாவுக்கு சரித்திரம் தெரியாது. அவர் வரலாற்றை மாற்றி எழுதுவதால் அவருக்கு வரலாறு தெரியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
மேலும், “இவை அனைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளில் இருந்து கவனத்தை சிதறடிக்கும்” என்றார்.
தொடர்ந்து, “நாட்டின் பணம் யாருடைய கைகளில் செல்கிறது. அவர்கள் (பாஜக) இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை, அவர்கள் அதைப் பார்த்து பயந்து ஓடிவிடுகிறார்கள்” என்றார்.
முன்னதாக, டிசம்பர் 6 ஆம் தேதி மக்களவையில் உரையாற்றிய ஷா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு "இரண்டு தவறுகளை" செய்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அண்டை நாட்டிடம் இழந்ததற்கு முன்னாள் பிரதமர் மீதும் அவர் குற்றம் சாட்டினார். “ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தற்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இது ஒரு வரலாற்றுத் தவறு,” என்றார்.
தொடர்ந்து, இந்தத் தவறுகள் காரணமாக காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டனர் என்றார். இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.