உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புதன்கிழமை அன்று உள் துறை அமைச்சகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. கோவா விஷ்யம் தொடர்பாக அதிகாரிகளுடன் பல தரப்பு மீட்டிங் நடைபெற்றது மட்டுமின்றி பல மத்திய அமைச்சர்களும் அமித் ஷா காண வருகை புரிந்தனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், பாராளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் விசிட் அடித்தனர்.
பின்னர், மதியம் நேரத்தில் ஜஹாங்கிர்புரி இடிப்பு குறித்து விவாதிக்க பாஜக தலைவர்கள் வருகை புரிந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஷா வீட்டில் இருந்தப்படியே அரசியல் பணிகளையும், அமைச்சக பணியையும் கையாண்டு வந்தார்.
தற்போது, ஓரிரு மாதங்களாக நிலைமை சீரானதை தொடர்ந்து, உள் துறை அமைச்சகத்தில் அதிக நேரத்தை ஷா செலவிட தொடங்கியுள்ளதால், மொத்த துறையும் பரபரப்பாக காணப்படுகிறது.
கட்சி விவகாரங்கள்
தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் உரையாடும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், கட்சி தன்னை தேர்தல் இயந்திரமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவரது கருத்தை ஏற்கவில்லை என தெரிகிறது.
அவர்கள் வழக்கம் போல், அமைப்பை வலுப்படுத்துவதும், கட்சியின் அடிப்படை சித்தாந்தத்தை தெளிவுபடுத்துவதுமே முக்கியமானது என நம்புகிறார்கள். அது நடந்தால், தேர்தல் வெற்றி தொடரும் என்கிறார்கள்.
ஆனால், புதன்கிழமை கிஷோரைச் சந்தித்த மூத்த தலைவர் ஒருவர்,டந்த சில நாள் பரபரப்பான செயல்பாடுகள் தோல்வி நினைப்பில் இருந்து மீண்டுவருவதற்கான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. லைமை ஏதாவது செய்யத் தயாராகி வருகிறது என்ற நம்பிக்கை தற்போது தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சைட் விசிட்
அரசியல் வன்முறை முதல் பாலியல் வன்கொடுமை வரை மேற்கு வங்கத்தில் பதிவாகும் அனைத்து வழக்குகளின் குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற இடத்திற்கு பாஜக தலைவர்களின் பிரதிநிதிகள் குழுவின் வருகை புரிவது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கடந்த காலங்களில் கேள்வி எழுப்பியது உண்டு. இந்நிலையில், பேரணியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, ஜஹன்புரியில் ஆக்கிரமிப்பு இடங்கள் இடிக்கப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பாஜக புத்தகத்தில் இருந்து சிறிய இலையை திரிணாமூல் எடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று, லோக்சபா உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த ஆறு பெண் எம்.பிக்கள் குழு, ஜஹாங்கிர்புரியில் உண்மை கண்டறிய செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil