மே 3 ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்ட மற்றும் பலர் காயமடைந்த மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு விசாரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை அறிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்திற்கு தனது நான்கு நாள் பயணத்தின் போது செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, மணிப்பூரில் விரைவில் அமைதியை மீட்டெடுக்கவும், அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதை உறுதி செய்யவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். மேலும், “மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமைதியாக உள்ளது. மக்களுக்கு வளர்ச்சி மற்றும் நலனை உறுதி செய்துள்ளோம்,'' என்றும் அமித் ஷா கூறினார்.
இதையும் படியுங்கள்: ‘கடவுளைக் கூட பா.ஜ.க விட்டு வைக்கவில்லை’: மத்திய பிரதேசத்தில் சிலைகள் விழுந்த விவகாரத்தில் காங்கிரஸ் தாக்கு
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும், இரு தரப்பு பிரதிநிதிகளும் அடங்கிய அமைதிக் குழு அமைக்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக சுதந்திரமான, நியாயமான மற்றும் நடுநிலையான விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசும், மணிப்பூர் அரசும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் என்று அமித் ஷா அறிவித்தார்.
மணிப்பூரில் உள்ள குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே மோதலுக்கு வழிவகுத்த, மெய்தி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி (எஸ்.டி) அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொண்ட மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, அமித் ஷா அவசர முடிவு என்று குறிப்பிட்டார்.
குக்கி சமூகம் மற்றும் மெய்தி சமூகம் ஆகிய இரு சமூக மக்களும் தங்கியுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அவர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து ஆதரவையும் உறுதியளித்த ஒரு நாள் கழித்து அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. அமித் ஷா காங்போக்பி மற்றும் மோரேயில் உள்ள குக்கி சமூகத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்தார், மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கு ஹெலிகாப்டர் சேவைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்குவது குறித்து அவர்களுக்கு உறுதியளித்தார்.
ஆதிக்கம் செலுத்தும் மெய்தி சமூகத்திற்கும் பழங்குடியின குக்கி சமூகத்திற்கும் இடையே மோதல் வெடித்ததால், மே 3 ஆம் தேதி முதல் கொந்தளிப்பான நிலையில் உள்ள மணிப்பூருக்கு அமித் ஷா வருகை தந்துள்ளார். வன்முறையில் குறைந்தது 80 பேர் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இரு சமூகத்தினரும் பரஸ்பரம் வீடுகளுக்கு தீ வைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
அமித் ஷாவின் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே:
- மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித்துறை விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.
- மணிப்பூர் ஆளுநரின் தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்படும், இதில் இருதரப்பு பிரதிநிதிகள், மற்றும் CSOக்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
- பல பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்காக குல்தீப் சிங் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த படைப்பிரிவு அமைக்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.
- நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், பாதியை மாநில அரசும், மற்ற பாதியை மத்திய அரசும் ஏற்கும்.
- அடுத்த இரண்டு மாதங்களுக்கு மணிப்பூருக்கு 30,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.
- மத்திய அரசில் இருந்து ஒரு இணைச் செயலாளர் நிலை அதிகாரி மற்றும் ஐந்து இயக்குநர்கள் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்கள் என்று அமித் ஷா கூறினார்.
- அரசு வகுத்துள்ள அடிப்படை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.