'2024-க்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்' - அமித் ஷா திட்டவட்டம்
2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்
2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மற்ற நான்கு கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
Advertisment
இத்தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். சக்ரதார்பூரில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது, "பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் தற்போது அனுமதியளித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைந்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்கு வங்கியாக சில கட்சிகள் கருதலாம். ஆனால் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டுக்குள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
முன்னதாக கடந்த வாரம் மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, "அசாமில் என்.ஆர்.சி எக்ஸர்சைஸ் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி மற்றும் தனி சட்டத்தின் படி மேற்கொள்ளப்பட்டது. என்.ஆர்.சி எக்ஸர்சைஸ் நாடு முழுவதும் பிரதிபலிக்கும்போது, அது இயல்பாகவே அசாமில் மீண்டும் செய்யப்பட வேண்டும். மக்கள், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பயப்படக்கூடாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எல்லோரும் என்.ஆர்.சி.யில் சேர்க்கப்படுவார்கள்," என்றார்.
ஜார்கண்ட்டில் மக்களிடையே உரையாற்றிய அமித் ஷா, "ஜார்கண்ட் மக்களை பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமா அல்லது நக்சலிசத்தை நோக்கி செல்ல வேண்டுமா என்பதை உங்கள் வாக்குகளே தீர்மானிக்கும்" என்றார்.
அங்கு ஒரு கருத்துக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, ஜார்கண்ட் மக்கள் தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை சமமாக பார்க்கிறார்கள். நக்சலிசத்தைப் போலவே பயங்கரவாதமும் வேரறுக்கப்பட வேண்டும் என்று மாநில மக்கள் விரும்புகிறார்கள். எல்லைகளை காக்கும் ஜவான்களில் பெரும்பான்மையானவர்கள் ஜார்க்கண்டிலிருந்து வந்தவர்கள். மோடி ஜி (பிரதமர் நரேந்திர மோடி) பயங்கரவாதிகளுக்கு வான் வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் சரியான பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறினார்.