நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 2024-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை அறிவித்தார்.
அரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தில் நடந்த இரண்டு நாள் ‘சிந்தன் சிவிர்’ கருத்தரங்கில் பேசிய அமித்ஷா, எல்லை தாண்டிய பயங்கரவாத குற்றங்களை திறம்பட சமாளிப்பது மாநில அரசுகள் மற்று மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பு என்று கூறினார்.
அமித்ஷா தலைமையிலான இரண்டு நாள் நிகழ்விற்காக எட்டு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் மற்றும் 16 மாநிலங்களின் துணை முதல்வர்கள் ஃபரிதாபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொளி மூலம் இந்த கருத்தரங்கில் பேசினார்.
“நம்முடைய அரசியலமைப்பில், சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநில விவகாரம்… ஆனால், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து அவர்கள் மீது சிந்திக்க, ஒரு பொதுவான உத்தியை உருவாக்கி, அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும்போது மட்டுமே நாம் எல்லை தாண்டிய குற்றங்கள் அல்லது எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக வெற்றிபெற முடியும்” என்று அமித்ஷா தனது உரையில் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட ‘விஷன் 2047’ மற்றும் ‘பஞ்ச் பிரான்’ ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்கும் நோக்கத்துடன் ‘சிந்தன் சிவிர்’ அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாள் நிகழ்வில் மாநிலத் தலைவர்கள் சைபர் கிரைம் மேலாண்மை, போலீஸ் படைகள் நவீனமயமாக்கல், குற்றவியல் நீதி அமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகரித்தல், தரைவழி எல்லை மேலாண்மை, கடலோர பாதுகாப்பு மற்றும் பிற உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
“2047 க்குள் வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய ‘நரி சக்தி’ பங்கு முக்கியமானது. பெண்களின் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும். மேற்கூறிய பகுதிகளில் தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் சிறந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம்” என்று உள்துறை அமைச்சகம் முன்னர்‘சிந்தன் சிவிர்’ பற்றி ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.