முஸ்லிம் இடஒதுக்கீடு: காங்கிரஸின் திருப்திபடுத்தும் அரசியலால் வழங்கப்பட்டது – அமித்ஷா

காங்கிரஸின் திருப்திபடுத்தும் அரசியலால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

karnataka muslim reservation, muslim qouta karnataka, lakes of bengaluru, bengaluru news, karnataka news, bengaluru live news, Karantaka, Bengaluru, Bangalore, Bengaluru news, bengaluru latest news, bengaluru live news, bangalore news, bangalore news live, karnataka poll news, karnataka poll, karnataka news, Karnataka latest news

காங்கிரஸின் திருப்திபடுத்தும் அரசியலால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் இரண்டு ஆதிக்க சமூகங்களான லிங்காயத்தாக்கள் மற்றும் வொக்கலிகாக்களை கவர்ந்திழுக்கும் வெளிப்படையான நடவடிக்கையாக, 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா மற்றும் பெங்களூரு நகரின் நிறுவனர் ‘நடபிரபு’ கெம்பேகவுடா ஆகியோரின் சிலைகளை அமித்ஷா ‘விதான் சவுதா வளாகத்தில் திறந்து வைத்தார்.

கோராட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு பற்றி அரசியல் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. காங்கிரஸின் எதிர்நிலையாக்க அரசியலால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும் அமித்ஷா கூறினார். பா.ஜ.க அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு வழங்கியது என்று கூறினார்.

2பி பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்த பா.ஜ.க அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து, மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் ரெஹ்மான் கான் தலைமையில் இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கூடினர். பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தை அணுக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. சிவாஜிநகர் சட்டப் பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷாத் பேசுகையில், “நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Amit shah says reservation for muslims due to congresss appeasement politics in karnataka

Exit mobile version