நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சன்சாத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமரை ஜனநாயகத் தலைவர் என்று பாராட்டினார். மேலும், மத்திய அமைச்சரவை தற்போதைய ஆட்சியில், முன்னேப்போதும் இல்லாத வகையில் ஜனநாயக முறையில் இருக்கிறது என்பதை அவரது விமர்சகர்கள்கூட ஒப்புக்கொள்வார்கள் என்று கூறினார்.
படிக்காத மக்களை நாட்டிற்கு சுமையாக இருக்கிறார்கள் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வியறிவற்றவர்கள் இந்தியாவின் நல்ல குடிமகனாக மாற முடியாது என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
நரேந்திர மோடி முதலில் குஜராத் முதல்வராகவும், பிறகு இந்தியாவின் பிரதமராகவும் ஆட்சிப் பொறுப்பேற்று 20 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சன்சாத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தற்போதைய அரசு எவ்வாறு பங்களித்துள்ளது என்பதைப் பற்றி அமித்ஷா பேசினார்.
“நீங்கள் இதை மதிப்பீடு செய்யும் போது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அதன் பங்களிப்பு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். படிப்பறிவில்லாத ஒருவர் நாட்டிற்கு சுமையாக இருக்கிறார். அவருக்கு அரசியலமைப்பால் கொடுக்கப்பட்ட உரிமைகள் தெரியாது அல்லது அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமைகள் தெரியாது. அத்தகைய நபர் எப்படி ஒரு நல்ல குடிமகனாக மாற முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், “அந்த நேரத்தில் (நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது), மிகப்பெரிய பிரச்சனை மாணவர்கள் பள்ளியில் இடைநிற்றல் விகிதம். அவர் ஒரு திருவிழா போல ஒரு சேர்க்கை செயல்முறையைத் தொடங்கி அதை 100% வரை எடுத்துச் சென்றார். அவர் பெற்றோர்களின் குழுவை அமைத்தார். ஒரு குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்றால், அது பற்றி யோசிக்கப்பட்டது. ஆசிரியர்களின் பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 37% இலிருந்து 1 சதவீதத்திற்கும் கீழே குறைந்தது.” என்று கூறினார்.
இந்த நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு ஜனநாயகத் தலைவர் என்று பாராட்டிய அமித்ஷா, தற்போதைய ஆட்சிக் காலத்தில் இருப்பதைப் போல மத்திய அமைச்சரவை முன்னெப்போதும் ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள் என்று கூறினார்.
பிரதமர் மோடி ஒரு எதேச்சதிகார தலைவர் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அமித்ஷா, பிரதமர் படிநிலை அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் வழங்கப்பட்ட அனைத்து தகுதியான ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். தேசிய நலனுக்கான முடிவுகளுக்கு அரசியல் ரிஸ்க் எடுக்க மோடி ஒருபோதும் தயங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“மோடியையும் அவருடைய வேலை பாணியையும் நான் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அவரைப் போல பொறுமையாக காதுகொடுத்து கேட்பவரை நான் பார்த்ததில்லை. பிரச்சினை எதுவாக இருந்தாலும், அவர் அனைவரையும் கேட்டு குறைவாக பேசுகிறார், பின்னர் சரியான முடிவை எடுப்பார்” என்று அமித்ஷா கூறினார்.
மோடி ஒழுக்கத்தை வலியுறுத்துவதால் சில சந்திப்புகளின் விவரங்கள், அவை முன்கூட்டியே இருப்பதால் இரகசியமாக இருக்க வேண்டும், பொதுவில் வெளிவராது என்று ஷா மேலும் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்டு ஆலோசனைக்கு பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி அரசாங்கத்தை நடத்துவதற்கு மட்டுமல்ல, எப்போதும் நாட்டை மாற்றுவதற்கான அதிகாரம் கொண்டவர் என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
“எனவே, அவர் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராக இருந்தாலும் தேசத்தின் மற்றும் மக்களின் நலன் கருதி கடுமையான மற்றும் ஆபத்தான முடிவுகளை எடுக்க தயங்குவதில்லை. நீங்கள் கருப்பு பணம் பதுக்களை ஒடுக்கும்போதும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வரும்போதும் வரி ஏய்ப்பின் அனைத்து ஓட்டைகளையும் அடைக்கும்போதும் பல ஆண்டுகளாக நமக்கு வாக்களித்தவர்கள் உட்பட சிலர் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், மோடி இதிலிருந்து எதையும் பெறப் போவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்த நடவடிக்கை இறுதியில் நாட்டிற்கு நன்மை பயக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய அமித்ஷா, ஒரு சிலர் ஆட்சியில் இருப்பது அவர்களின் தலைமையின் உரிமை என்று நம்புகிறார்கள் என்றார். எங்களுடைய தோல்விகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தரத்தை குறைக்காதீர்கள்” என்று அமித்ஷா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.