Advertisment

காஷ்மீர் விவகாரம் : ஒட்டு மொத்த நாடாளுமன்றத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமித் ஷா!

Amit Shah : ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா குறித்த முழுத் திட்டமும் பிரதமர், உள்துறை அமைச்சர் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காஷ்மீர் விவகாரம் : ஒட்டு மொத்த நாடாளுமன்றத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமித் ஷா!

Liz Mathew

Advertisment

Amit Shah Scrapped Jammu Kashmir Special Status : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான மசோதா ஒன்றை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (05/08/2019) மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.  காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா (Kashmir Reorganization Bill 2019) என்று அழைக்கப்படும் மசோதா மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படும் என்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும் வாதத்தை உருவாக்கிய இந்த மசோதாவை உருவாக்குவதற்கு மிக நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தன்னுடைய உள்த்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் , காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தபட்ட பல்வேறு முக்கியமான தலைவர்களை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமித் ஷா அரசியல் வாழ்வில் மிக முக்கியமான தருணம்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் பிரதம அமைச்சருக்கு மட்டுமே தெரியும் என்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கூட ஞாயிற்றுக்கிழமை இரவு மசோதாவை தயார் செய்யும் போது தான் இந்த விஷயம் தெரியும்  என்றும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதர கேபினட் அமைச்சர்கள் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகவே தகவல்கள் வெளியாகின.  திங்கள்கிழமை காலை பிரதமர் தலைமையில் கேபினட் கூடும் போது தான்,  அமைச்சர்கள் அனைவருக்கும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன.

அமித் ஷா கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மீண்டும் ஆறு மாதங்களுக்கு நீளும் என்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் போதே,  “இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் இடையேயான ஒப்பந்தமானது தற்காலிகமானது.  இடைக்கால பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மட்டுமே ஷேக் அப்துல்லாவுடன் கையெழுத்திடப்பட்டது என்றும்  அது நிரந்தரமானது அல்ல” என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க்கது. அமித் ஷாவின் மிக முக்கியமான இந்த நடவடிக்கை, அவர் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

காஷ்மீரில் இருக்கும் சிறப்பு அந்தஸ்தினை நீக்கம் செய்வதற்கு பல ஆண்டுகளாக பாஜகவினர் முயற்சி செய்து வந்த நிலையிலும், இதற்கு முன்பு தலைவர்கள் செயல்பட்டது போல் செயல்படாமல் அமித்ஷா மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளார்.  கடந்த முறை மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இது தொடர்பான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

கடந்த ஆட்சியின் போது ராஜ்ய சபையில் அதிகளவு உறுப்பினர்கள் இல்லாதது பல மசோதாக்கள் தாமதமாவதற்கு காரணமாக அமைந்தது.  இதனை அறிந்த பாஜகவினர் ராஜசபையில் தங்களின் பெரும்பான்மையை அதிகரிக்க முடிவு செய்தனர்.  பலர் எதிர்க்கட்சியில் இருந்து விலகியதும் சிலர் பாஜகவில் இணைந்ததும் இந்த பெரும்பான்மை உறுப்பினர்களை பெற மிக முக்கியமானதாக அமைந்தது.  இருந்தாலும் நாங்கள் இந்த மெஜாரிட்டியை கொண்டாடவில்லை. பல்வேறு சிறப்பு வாய்ந்த முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தேவை என்பதை உணர்ந்து பாஜக வெகுநாட்களாக செயல்பட்டு வந்தது என பாஜகவின் மூத்த அமைச்சர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

இருப்பினும்  கடந்த ஆட்சியின் போது முப்தி முகமது சையது உடன் பேச்சுவார்த்தை நடத்தி  சமரசக் குழுக்கள் உருவாக்கப்பட்டு காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்தது.  ஆனாலும் சில சமயங்களில் கற்களை கொண்டு தாக்குபவர்கள், கலகக்காரர்கள்  பதிலடி கொடுப்பது, ராணுவ தேவைகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்குவது ஆகியவற்றை மேற்கொண்டது பாஜக. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை அமித் ஷா காத்திருக்க விரும்பவில்லை.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகே காஷ்மீரில் அதிக அளவு பாதுகாப்புப் படை போடப்பட்டது. அறிவிப்பிற்கு பிறகு தேவையில்லாத கலகங்களை தவிர்க்க இவ்வாறான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கிய தலைவர்கள் அனைவரும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அமித் ஷாவின் பங்கு உள்ளது.

மோடி புகழாரம்

அமித் ஷாவின் நேற்றைய நாடாளுமன்ற உரையை புகழ்ந்து தள்ளிய பிரதமர் பின்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அதில் “கடந்த காலங்களில் நம்முடைய ஜம்மு- காஷ்மீர் சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அமித் ஷாவின் ராஜ்ய சபை உரை மிகவும் நுட்பமானது. தொலைநோக்கு பார்வை கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசியலமைப்புச் சபையை கொண்ட ஜம்மு காஷ்மீர், இனி சட்டமன்றங்களை கொண்ட யூனியன் பிரதேசமாக  செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மசோதாவின் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்த அகதிகள் காஷ்மீரில் சொந்தமாக நிலம் வாங்கி வாழ வகை செய்கிறது. மேலும் தலித்துகள், நலிவுற்ற பிரிவினர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற இந்த மசோதா உதவும் என்றும் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Amit Shah Jammu And Kashmir Jammu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment