விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
ஆனால், இந்த போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் ராமர் கோவிலுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க விரும்புவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில் தான் ராமர் கோவிலுக்கு பூமிபூஜை செய்யப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், ஆகஸ்ட் 5-ம் தேதி காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை கடுமையாக சாடினர்.
காங்கிரஸ் இந்த நாளை எதிர்ப்பிற்காக தேர்ந்தெடுத்தது, வெள்ளிக்கிழமை கருப்பு ஆடைகளை அணிந்து கொண்டது, இந்த நாளில்தான் பிரதமர் மோடி ராமஜென்மபூமிக்கு அடிக்கல் நாட்டினார்” என்று அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறினார்.
"காங்கிரஸ் பொறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் சட்டப்படி நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில், இதன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது... அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்,” என்றார்.
முதல்வர் ஆதித்யநாத்தும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். “இதுவரை காங்கிரஸ் சாதாரண உடையில்தான் போராட்டம் நடத்தியது, ஆனால் இன்று அவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். இது ராம பக்தர்களை அவமதிக்கும் செயலாகும். இன்று அயோத்தி திவாஸ், ராம ஜென்மபூமியில் கோயில் கட்டுவதற்கான தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நாளை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது,” என்றார்.
தற்போது கோவில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஷா கூறினார். கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை நேரடியாக சொல்லாமல், அமலாக்கத்துறை நடவடிக்கை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களை சாக்காக வைத்து போராட்டம் செய்வதாக அவர் கூறினார்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், இந்தப் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் மோடி அமைதியான முறையில் இதற்கு தீர்வு கண்டார்,” என்றார்.
அமித்ஷா, யோகி கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பதிவில், கூறியது: “விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஜிஎஸ்டிக்கு எதிராக காங்கிரஸின் ஜனநாயகப் போராட்டங்களை திசைதிருப்ப உள்துறை அமைச்சர் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒரு நோய்வாய்ப்பட்ட மனம் மட்டுமே இதுபோன்ற போலி வாதங்களை உருவாக்க முடியும். இந்த போராட்டங்கள் மோடி அரசைத் தாக்கியிருப்பது தெளிவாகிறது!” என்று ட்வீட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“