Advertisment

Amitabh Bachchan Tamil News: அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய்-க்கு கொரோனா உறுதி: நலம் பெற பிரபலங்கள் பிரார்த்தனை

Amitabh Bachchan Breaking News: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amitabh Bachchan Tamil News: அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய்-க்கு கொரோனா உறுதி: நலம் பெற பிரபலங்கள் பிரார்த்தனை

Amitabh Bachchan News:  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், தற்போது மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், அமிதாப் பச்சனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேபிட் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில், யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

முன்னதாக, நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில்“ கோவிட் பாசிட்டிவ் சோதனை செய்யப்பட்டதையடுத்து  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் ....  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.  முடிவுகள் காத்திருக்கின்றன ....  கடந்த 10 நாட்களில் என்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!” என்று பதிவு செய்தார்.

 

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அபிஷேக் பச்சன் தனது ட்விட்டரில், “எனக்கும், எனது தந்தைக்கும் கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டது . லேசான அறிகுறிகள் இருப்பதால்  இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம்.

குடும்ப உறுப்பினர்கள்,  ஊழியர்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி" என்று பதிவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Amitabh Bachchan Tamil News Live: அமிதாப் பச்சன் , அபிஷேக் பச்சன் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.














Highlights

    18:53 (IST)12 Jul 2020

    நானும் எனது தந்தையும் மருத்துவமனையில் இருப்போம்

    டாக்டர்கள் முடிவு செய்யும் வரை நானும் எனது தந்தையும் மருத்துவமனையில் இருப்போம். எல்லோரும் தயவுசெய்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். எல்லா விதிகளையும் பின்பற்றவும்.

    - அபிஷேக் பச்சன்

    17:49 (IST)12 Jul 2020

    அமிதாப் பச்சனின் வீட்டுக்கு சீல்

    அமிதாப் - ஜெயா பச்சன் தம்பதியின் மகள் ஸ்வேதா பச்சனுக்கும், அவரது பிள்ளைகளான அக்ஸ்த்யா நந்தா மற்றும் நவ்யா நவேலி நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அமிதாப் பச்சனின் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    16:49 (IST)12 Jul 2020

    இரண்டாம் கட்ட சோதனையில் உறுதி

    ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆராத்யா பச்சனுக்கு இரண்டாம் கட்ட சோதனையில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவரின் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நலம் பெற பிரார்த்தனை செய்து  வருகின்றனர்.

    15:26 (IST)12 Jul 2020

    ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி

    ஐஸ்வர்யா ராய, பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் துணைவியார் ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை எனத்  தெரிய வந்துள்ளது 

    12:47 (IST)12 Jul 2020

    அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப சிறப்பு வழிபாடுகள்

    அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப மத்திய பிரேதேச உஜ்ஜைன் நகரில் உள்ள கோவிலில்  சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. 

     

    12:35 (IST)12 Jul 2020

    நீங்கள் விரைவாக குணமடைய எனது பிரார்த்தனைகள் - சோயப் அக்தர்

    11:35 (IST)12 Jul 2020

    உடல்நலப் பாதிப்பில் இருந்து இந்திய மருத்துவர்களும், அமிதாப் பச்சனும் மீண்டு வருவார்கள்

    அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். 

    உடல்நலப் பாதிப்பில் இருந்து இந்திய மருத்துவர்களும், அமிதாப் பச்சனும் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.   

    11:16 (IST)12 Jul 2020

    அமிதாப் பச்சன் குடியிருப்பு கட்டுப்படுத்தப்படும் பகுதியாக அறிவிப்பு

    அமிதாப் பச்சன் வீட்டை கட்டுப்படுத்தும் பகுதியாக பிருஹன்மும்பை மாநகராட்சி அறிவித்தது.  

    10:29 (IST)12 Jul 2020

    அமிதாப் பச்சனின் இல்லம் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

    மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் இல்லத்திற்கு மும்பை மாநகராட்சியின் (பி.எம்.சி) துப்புரவுத் தொழிலாளர்கள் கிருமி நீக்கம் செய்தனர்.   .

    முன்னதாக, நடிகர் அமிதாப், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    09:31 (IST)12 Jul 2020

    அபிஷேக் பச்சன் விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து.

    கடந்த ஜூலை 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் அபிஷேக் பச்சனின் Breathe: Into the Shadows எனும் முதல் வெப் சீரியஸ் தொடர் வெளியானது. இந்தத் தொடரில், அபிஷேக் பச்சனின் நடிப்புத் திறனுக்கு ஏராளமானோர் பாராட்டுக்களைப் தெரிவித்து வந்தனர.  'பிக் புல்' என்ற தனது படத்தின் டிஜிட்டல் வெளியீட்டையும் அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

     

    09:22 (IST)12 Jul 2020

    உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க நான் பிராத்திக்கின்றேன் - சச்சின் டெண்டுல்கர்

    உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதற்கும்,விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கின்றேன்  என்று சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் .

    09:07 (IST)12 Jul 2020

    மீண்டு வாருங்கள் ஐயா - நடிகர் மம்மூட்டி

    09:01 (IST)12 Jul 2020

    'அமிதாப் பச்சன் உடல்நிலை சீராக உள்ளது' - நானாவதி மருத்துவமனை நிர்வாகம்.

    அமிதாப் பச்சன் லேசான அறிகுறிகளுடன் காணப்படுகிறார். உடல்நிலை சீராக உள்ளது.தற்போது, மருத்துவமனையின் தனிமைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுக்ளார் என்று நானாவதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பி.ஆர்.ஒ தெரிவித்தார்.  

    08:47 (IST)12 Jul 2020

    மோகன் லால்: விரைந்து குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்

    அமிதாப் பச்சன் ஐயா!  நீங்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் என்று நடிகர் மோகன் லால் தனது ட்விட்டரில் பதிவு செய்தார் 

    08:37 (IST)12 Jul 2020

    பிரியங்கா சோப்ரா : குணமடைய வாழ்த்துகிறேன்

    08:26 (IST)12 Jul 2020

    நடிகர் தனுஷ் - விரைவில் குணமடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன்

    08:21 (IST)12 Jul 2020

    நடிகர் சரத்குமார் - விரைவில் குணமடைய நாங்கள் பிராத்திக்கின்றோம்

    08:15 (IST)12 Jul 2020

    நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று

    பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், தற்போது மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

    Amitabh Bachchan Tamil News Updates: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்! ”  என்று அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.

    Amitabh Bachchan
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment