அமிதாப் பச்சன், ட்விட்டருக்கு முழுக்கு?

அமிதாப் பச்சன் ட்விட்டருக்கு முழுக்கு போட இருப்பதாக அவரே வெளியிட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அது நிஜ கோபமா?

அமிதாப் பச்சன் ட்விட்டருக்கு முழுக்கு போட இருப்பதாக அவரே வெளியிட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அது நிஜ கோபமா?

அமிதாப் பச்சன், ‘பிக் பி’ என அழைக்கப்படும் மெகா ஸ்டார்! ட்விட்டரில் ‘ஃபாலோ’ செய்பவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் 2-வது இடத்தைப் பிடித்த விஐபி இவர்! ஆனால் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, இவரை ‘ஃபாலோ’ செய்கிறவர்களின் எண்ணிக்கை 33 மில்லியனில் இருந்து 32.9 மில்லியனாக குறைந்திருக்கிறது. இது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கைக்கு சமம்!

ட்விட்டர் ‘ஃபாலோயர்’களின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, அமிதாப் பச்சன் நேற்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘ட்விட்டர், எனது ஃபாலோயர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டாய்! ஹா.. ஹா… அது ஜோக்! உன்னிடம் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது. என்னை உன்னில் பயணிக்க வைத்ததற்கு நன்றி. நிறைய மீன்கள் இந்தக் கடலில் இருக்கின்றன. நிறைய வேடிக்கைகளும்கூட’ என குறிப்பிட்டிருக்கிறார் அமிதாப்.

அமிதாப் பச்சன் சீரியஸாக இதை குறிப்பிடுகிறாரா, அல்லது விளையாட்டாக சொல்கிறாரா? என புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஏதோ சில காரணங்களுக்காக ட்விட்டரில் இருந்து விலகியிருக்க அவர் முடிவு செய்துவிட்டதையே இந்த பதிவு உணர்த்துவதாக பேசப்படுகிறது.

அமிதாப் பச்சன் ஒருவேளை ட்விட்டரை விட்டு விலகினால், அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமையும்.

 

×Close
×Close