பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ஐ தடை செய்வதில் மத்திய அரசு மேற்கோள் காட்டிய காரணங்களில் ஒன்று, உலகளாவிய பயங்கரவாத குழுக்களுடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது ஆகும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பி.எஃப்.ஐ-யின் செயல்பாட்டாளர்கள் சிலர், ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைந்து சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ISIS உடன் தொடர்புடைய PFI உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் சிலர் மாநில காவல்துறை மற்றும் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, PFI தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்பு கொண்டுள்ளது. கண்ணூரைச் சேர்ந்த பல PFI ஆட்கள் ISIS இல் இணைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் இணைந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வில்லை. எஸ்.டி.பி.ஐ., 2009இல் உருவாக்கப்பட்டது.
அப்போது, பி.எஃப்.ஐ.யில் இருந்த சில போராளிக் குழுக்கள் பிரிந்து செல்ல முடிவெடுத்தன.
இந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘கண்ணூர் தொகுதி’யுடன் தொடர்புடைய பலர் பிஎஃப்ஐ உறுப்பினர்கள் என்று பாதுகாப்பு முகமைகள் கூறுகின்றன.
அந்தக் குற்றச்சாட்டில், பி.எஃப்.ஐ., ‘கண்ணூர் தொகுதியின்’ உறுப்பினர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தரப்பில் போரில் ஈடுபடுவதற்காக சிரியாவுக்குச் சென்றனர் அல்லது செல்ல முயன்றனர் எனக் கூறப்படுகிறது.
இதில் சிலர் குடும்பத்துடன் கண்ணூர் சென்றனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.., ஆதரவாளராக அறியப்படும் ஷாஜகான் வல்லுவ கண்டி பி.எஃப்..ஐ., நிர்வாகி ஆவார்.
இவர் முகம்மது ஷமீர் என்பவருடன் ஐ.எஸ்.ஐ.எஸ்., சேர்ந்துள்ளார்.
கண்ணூரைச் சேர்ந்த 12 பேரை ஷாஜஹான் அடையாளம் கண்டுள்ளார், அவர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளனர் அல்லது துருக்கியால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் கூறினார். அவர் இரண்டு முறை சிரியா செல்ல முயன்றார், ஆனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில், பாலக்காட்டைச் சேர்ந்த மற்றொரு PFI உறுப்பினர் அபு தாஹிர், 2017 இல் IS க்காகப் போரிட்டு சிரியாவில் இறந்தார்.
24 வயதான அவர் 2013 இல் கத்தாரின் தோஹாவில் கணக்காளராகப் பணிபுரிவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.
தோஹாவுக்குச் செல்வதற்கு முன், தாஹிர் PFIக்கு சொந்தமான மலையாளப் பத்திரிகையான தேஜாஸில் பணிபுரிந்தார் ஆவார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"