உம்பன் புயல் சேதம்: மேற்கு வங்கத்தில் இன்று மோடி ஆய்வு

Amphan cyclone : பிரதமர் மோடி இன்று ( 22ம் தேதி) புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Amphan cyclone, super cyclone amphan, PM Modi, West Bengal, odisha,Cyclone Amphan,Bengal Cyclone Amphan,Pm Modi to visit bengal,PM Modi odisha,PM Modi cyclone amphan
Amphan cyclone, super cyclone amphan, PM Modi, West Bengal, odisha,Cyclone Amphan,Bengal Cyclone Amphan,Pm Modi to visit bengal,PM Modi odisha,PM Modi cyclone amphan

உம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி, மே 22-ம் தேதியான இன்று, விமானம் மூலம் பார்வையிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மே 20ம் தேதி, மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. புயலால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். மேலும், புயல் பாதிப்பை நேரில் வந்து பார்வையிடுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ( 22ம் தேதி) புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, ‘மேற்கு வங்கத்தில் உம்பன் புயல் பாதித்த வீடியோ காட்சிகளை பார்த்தேன். இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் மேற்கு வங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது. புயலால் பாதித்தவர்கள் மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறேன். இயல்பு நிலைக்கு மேற்கு வங்கத்தை கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

72 பேர் பலி : மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 72 பேர் பலியாகியுள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா. மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்பன் புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amphan cyclone super cyclone amphan pm modi west bengal odisha

Next Story
விமான சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் – மத்திய அமைச்சர் ஹர்தீ்ப் சிங் புரிcorona virus, lockdown, indian aviation, domestic flight services, hardeep singh puri interview, civil aviation minister hardeep singh puri, domestic flights to resume, domestic flights guidelines, india coronavirus, india covid lockdown, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X