வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அமிர்தபால் சிங் மீதான பஞ்சாப் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வெளிநாட்டில் அதிக அளவில் எதிர்ப்புகளும் அவர்கள் மாநிலத்தில் எதிர்ப்புகள் இல்லாத நிலையில், பஞ்சாபில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை நிலைநிறுத்தும் வெளிநாட்டு ஆதரவை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பஞ்சாபில் மிகவும் தீவிரமான போராட்டம், மொஹாலியில் சாலை மறியல், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றில் காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்களின் ஒருங்கிணைந்த தாக்குதல் வெளிப்பட்டது. கனடாவில், சமூக ஊடகங்களில் கோபங்கள் மட்டுமே வெளிப்பட்டது.
இண்டர்நெட் சேவை இடைநிறுத்தம் மற்றும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவை இந்த எதிர்வினைக்கு காரணம் என்று சிலர் வாதிட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரி சுட்டிக்காட்டுகிறார், இதுதான், காரணம் என்றால், ஆபரேஷன் அமிர்தபால் நடத்தப்பட்ட ஒரு நாள் கழித்து, பாடகர் சித்து மூஸ்வாலாவின் நினைவு தினத்திற்கு கூட்டம் கூடியிருக்கக்கூடாது என்று கூறுகிறார்.
அமிர்தபாலும் துபாயில் அந்நிய மண்ணில் பிரிவினைவாதக் கோளத்தில் தனது முதல் பிரவேசம் செய்தார். ஆகஸ்ட் 2022-ல் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு அவர் 10 ஆண்டுகள் அங்கேயே இருந்தார் – ஞானஸ்நானம் பெற்று முப்பரிமாணத் திட்டத்தைத் தொடங்கினார் – சீக்கிய மதத்தின் தூய வடிவத்திற்குத் திரும்புதல், போதைப்பொருளிலிருந்து விடுதலை மற்றும் தனி அரசாங்கத்தை உருவாக்குதல் என்ற திட்டங்களைத் தொடங்கினார்.
புலம்பெயர்ந்த பஞ்சாபிகள் எப்போதும் அரசின் விவகாரங்களில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி
காலிஸ்தான் திட்டங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மண்ணில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டுள்ளது என்பது இரகசியமல்ல. பஞ்சாபில் பணியமர்த்தப்பட்ட ஒரு போலீஸ் உயர் அதிகாரி, 2016-17-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரிக் ஜகதீஷ் கக்னேஜா மற்றும் 2009-ல் ராஷ்டிரிய சீக்கிய சங்கத் தலைவர் பேராசிரியர் ருல்தா சிங் ஆகியோரின் கொலைகள் உட்பட பல குறிவைக்கப்பட்ட கொலைகள் வெளிநாடுகளில் எவ்வாறு திட்டமிடப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகிறார். ருல்தா சிங் வழக்கில், மூன்று பிரிட்டிஷ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2010-ல் கைது செய்யப்பட்டனர்.
“பயங்கரவாத வன்முறை மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தும் வெளிநாட்டில் வெளிப்படுகின்றன. பஞ்சாபை மீண்டும் வன்முறைச் சுழலுக்குள் தள்ள ஒரு ஒருங்கிணைந்த முயற்சி நடக்கிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மாநிலத்தில் ஆதரவு இல்லை. இது சமீபத்திய அடக்குமுறையைத் தொடர்ந்து மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அதிகாரி கூறினார். அமிர்தபால்கூட சமூக ஊடகங்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் பணம் கொடுத்து வெளிநாட்டு ஆதரவைப் பெற்றுள்ளார்.
தனது 2021-ம் ஆண்டு புத்தகமான ரத்தத்துக்கு ரத்தம்: உலகளாவிய காலிதான் திட்டத்தின் 50 ஆண்டுகள் (Blood for Blood: Fifty Years of the Global Khalistan Project) கனடா
பஞ்சாபிற்கு அதிக சுயாட்சி அல்லது தனி நாடு கோரும் அமைப்புகள் அம்மாநிலத்தில் உள்ளன. ஆனால், அவை அரசியலமைப்பின் வரம்பிற்கு உட்பட்டு வன்முறையை ஆதரிக்கவில்லை. அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் ஜக்ரூப் சிங் செகோன் கூறுகிறார், “எங்களுக்கு எப்போதுமே ஒரு விளிம்பு இருந்தது, ஆனால் அது பிரதான நீரோட்டத்துடன் அமைதியாக இருந்து வருகிறது. ஜனநாயகத்தின் செயல்பாட்டைச் செய்கிறது.” என்று கூறுகிறார்.
பஞ்சாப் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் காலிஸ்தான் வாக்கெடுப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை செகோன் சுட்டிக்காட்டுகிறார். இது அமெரிக்க வழக்கறிஞரும் நீதிக்கான சீக்கியர்களின் (SFJ) நிறுவனருமான குர்பத்வந்த் சிங் பண்ணுவின் திட்டம் ஆகும். “காலிஸ்தானுக்காக பாடுபடுவதாகக் கூறும் பண்ணு, அவருக்கு இங்கு பஞ்சாபில் எந்த ஆதரவும் இல்லை, அவர் புலம்பெயர்ந்தோரிடமிருந்து ஆதரவு பெறுகிறார். அதனால்தான், முதல் வாக்கெடுப்பு லண்டனில் நடத்தப்பட்டது, பின்னர் கனடாவில் நடத்தப்பட்டது” என்று கூறுகிறார்.
வல்லுநர்கள் இந்த ஆதரவை அடையாளத்திற்கான தேடலே காரணம் என்று கூறுகிறார்கள். பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மஞ்சித் சிங் கூறுகையில், 1980-களில் மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்த தலைமுறையினர் விரைவாக நிதி சுதந்திரத்தை அடைந்தனர். ஆனால், அது வெளிநாட்டு கலாச்சாரத்தில் ஒருபோதும் சேர முடியாது. “அவர்கள் சுயமாக இருக்க விரும்பினர், அதனால் குருத்வாராக்கள் காளான்களாக தோன்ற வழிவகுத்தது. சில நேரங்களில் வார இறுதி நாட்கள் காலிஸ்தானிகளால் கைப்பற்றப்பட்டது. எனவே, அவர்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு இயக்கத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது பஞ்சாப் தொடர்பான ஏதோ ஒன்றின் பகுதியாகவோ இருக்கிறார்கள். அது வலுவான பஞ்சாப் அல்லது தனி காலிஸ்தானுக்காக இருக்கலாம். இங்குதான் அவர்கள் ஒரு நோக்கத்தையும் அடையாளத்தையும் காண்கிறார்கள்.” என்று கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“