Advertisment

பஞ்சாப் தசரா கொண்டாட்டத்தில் நேர்ந்த விபத்து - ரயில்வே துறை விளக்கம்

பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமிர்தசரஸ் ரயில் விபத்து, Amritsar Train Accident, Tamil Indian express

அமிர்தசரஸ் ரயில் விபத்து :  தசரா விழா இந்தியா முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்ஸில் கொண்டாடப்பட்ட தசரா தேசமெங்கும் சோகத்தினை வரவழைத்திருக்கிறது.

Advertisment

அமிர்தசரஸ் ரயில் விபத்து

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இருக்கும் ஜோரா பதாக் என்ற பகுதியில் நேற்று ராவண வதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வானவேடிக்கைக்காக பட்டாசுகள் வாங்கி கொளுத்திய போது, பட்டாசுகள் தாறுமாறாக வெடிக்கத் தொடங்கியது.

சிறு காயங்களுக்கு பயந்து அங்குமிங்கும் மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அருகில் இருக்கும் தண்டவாளம் வழியே சிலர் ஓட முயன்ற போது, அந்த வழியே வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த கூட்டத்தில் மோதியது.

அமிர்தசரஸ் ரயில் விபத்து - மோடி இரங்கல்

இந்த கோரவிபத்தினால் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த கோர நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

பலியானோருக்கு இழப்பீடு

அரசு முறை பயணமாக இஸ்ரேல் செல்ல இருந்த பஞ்சாப் முதல்வர் இன்று அமிர்தசரஸ் விரைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.  மாநில அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

நேரில் சென்று ஆறுதல் கூறிய சித்து

விரைவாக வந்த ரயில் மக்களை எச்சரிக்கை செய்யும் ஒலிப்பானை ஒலிக்கவில்லை. கண்களை மூடித் திறக்கும் சிறு பொழுதில் நடந்துவிட்ட துயர் சம்பவம் இது என நவ்ஜோத் சிங் சித்து, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனையில் கூறியிருக்கிறார்.

ரயில்வே துறை விளக்கம்

ரயில்வே ட்ராக் அருகில் தசரா விழா நடைபெற இருக்கிறது என்பது குறித்து எங்களுக்கு முறையான தகவல்களை யாரும் அளிக்கவில்லை. அதனால் ரயில் எப்போதும் போல் இயக்கப்பட்டது என ரயில்வே துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகளை முழுமையாக படிக்க

இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்

60 பேரின் மறைவு குறித்து பாகிஸ்தானின் பிரதம அமைச்சர் இம்ரான் கான் தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார் இம்ரான் கான்.

விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர்

விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங். இன்று இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமரிந்தர் சிங்.

நான்கு வாரங்களுக்குள் முறையான தகவலை சமர்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று மதியம் பஞ்சாப் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆகியோருடன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

முதல் ரயிலினால் தான் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கின்றன. இரண்டாவது ரயில் ஏற்கனவே இறந்தவர்களின் உடலின் மீது மேலும் பயணித்து இந்த விபத்தை மேலும் கோரமாக்கியிருக்கிறது.

Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment