அமிர்தசரஸ் ரயில் விபத்து ரயில்வே விளக்கம் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ராவணின் உருவ பொம்பை எரிப்பு நிகழ்வினை நன்றாக காணும் வகையில் மக்கள் அங்கிருந்து தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான முழுமையான தகவலைப் படிக்க
அமிர்தசரஸ் ரயில் விபத்து ரயில்வே விளக்கம்
அப்போது அவ்வழியே வேகமாக வந்து கொண்டிருந்த வாகனம் அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தின் விளைவாக 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக அமிர்தசரஸ் ரயில்வே அதிகாரிகள் அளித்த தகவலில் எங்களுக்கு எந்த விதமான முன்னறிக்கையும் தரவில்லை என்று கூறுகின்றனர்.
பஞ்சாப் வடக்கு ரயில்வேயில் இருக்கும் ஃபெரோஸ்போர் பகுதியில் இருந்து இரண்டு அதிவேக ரயில்கள் அவ்வழியில் அச்சமயம் சென்றிருக்கின்றன. ஆனால் இது தொடர்பான முறையான தகவல் எங்களுக்கு அளிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அங்கு அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் இருக்கும் கேட்மேன் ஆல் க்ளியர் க்ரீன் சிக்னல் அளித்த காரணத்தால் தான் அப்பக்கம் ரயிலகள் செலுத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார்கள்.
அம்மக்களாவது அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில், இன்று இரவு இப்படி ஒரு விழா நடக்க இருக்கிறது என்பதை முறையாக தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படி அறிவித்திருந்தாலாவது ரயிலை ஓட்டியவர்கள் மற்றும் கார்ட்கள் என இருவரும் ரயிலை நிறுத்தியிருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது என்று அவர்கள் தெரிவித்தனர். ராவணின் பொம்மை எரிய ஆரம்பத்தவுடன் மக்கள் அனைவரும் அந்த நிகழ்வின் மீது அதிக ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வந்த காரணத்தால் ரயில் வந்ததை கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளார் தீபக் குமார் இது குறித்து குறிப்பிட்ட போது எங்களுக்கு வந்த சிக்னல் மற்றும் அறிவிப்புகள் எல்லாம் சரியாக இருந்ததால் நாங்கள் வண்டியை எப்போதும் போல் இயக்கினோம் என்று கூறினார்.