Advertisment

திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்ததாக வெளியான வதந்தி; எக்ஸ் பயனர்கள் மீது அமுல் நிறுவனம் புகார்

திருப்பதி கோவில் லட்டு பிரசாத சர்ச்சை; கலப்பட நெய் சப்ளை செய்தது அமுல் நிறுவனம் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்ட நெட்டிசன்கள்; காவல் துறையில் அவதூறு புகார் அளித்த அமுல் துணை பொதுமேலாளர்

author-image
WebDesk
New Update
Tirumala Tirupati Devasthana scanning machine for laddu distribution Tamil News

Brendan Dabhi

Advertisment

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (GCMMF) மூத்த அதிகாரி, அமுல் நிறுவனத்தை அவதூறாகப் பேசியதாகவும், திருப்பதி பாலாஜி கோயிலுக்கு விலங்குகளின் கொழுப்பு இருப்பதாகக் கூறப்படும் நெய்யை விநியோகித்ததாக வதந்திகளை பரப்பியதற்காகவும் பல சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக சனிக்கிழமை புகார் அளித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: Amul Dy GM files complaint against X users for rumours that it supplied adulterated ghee to Tirupati temple

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் துணைப் பொது மேலாளர் (விற்பனை) ஹேமந்த் கவுனி தனது புகாரில், செப்டம்பர் 20 ஆம் தேதி டெல்லிக்குப் பயணம் செய்ததேன். மாலை 6:30 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்தை அடைந்தபோது, சமூக வலைதளங்களில் உலாவிய நிலையில் எக்ஸ் பக்கத்தில், பல பயனர்கள் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட நெய்யை சப்ளை செய்தது 'அமுல்' என்று பதிவிட்டதைப் பார்த்தேன். திருப்பதி பாலாஜி கோவிலில் லட்டு தயாரிக்க இந்த நெய் பயன்படுத்தப்பட்டது, என்று பயனர்கள் பதிவிட்டு இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், அமுல் பிராண்டின் உரிமையாளரான குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வதந்தியான பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹேமந்த் கவுனி குறிப்பிட்டுள்ளார். 

எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட எக்ஸ் பயனர்களாக ‘ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ்’, ‘பஞ்சாரா1991’, ‘சந்தன்ஏஐபிசி’, ‘மதச்சார்பற்ற பெங்காலி’, ‘ராஹுல்_1700’, ‘ப்ரொஃபேம்’ மற்றும் ‘பிரிட்டிபத்மஜா’ என்று போலீசார் பெயரிட்டுள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அவரது கட்சி தேசிய பால் வள மேம்பாட்டுத் துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது.

ஆனால், திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம், நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதை மறுத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tirupati Gujarat Amul Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment