scorecardresearch

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மிக்கு உதவியது எது?

நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு ஒரு கடினமானப் பணி இருந்தது. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணிக்கை நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க இறுதியில் பின்வாங்கியது.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மிக்கு உதவியது எது?

டெல்லி அரசாங்கத்தின் திட்டங்களின் பயனாளிகள் மீது கவனம் செலுத்துவது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரச்சாரத்தின் முகமாக மாற்றுவது, மாநிலத்தையும் குடிமை அமைப்பையும் ஆளும் கட்சிக்கும் ஒரு ‘இரட்டை இயந்திரம்’ அரசு இருப்பதை உறுதியளித்தல் – இவையே ஆம் ஆத்மி கட்சிக்கு உதவிய முக்கிய காரணிகள். டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆத்மி கட்சி பாதிக்கு மேல் வெற்றி பெற்றது.

நிச்சயமாக, பா.ஜ.க-வுக்கு ஒரு கடினமான பணி இருந்தது – அது மூன்று முறை அதிகாரத்தில் இருந்தாலும், ஆட்சிக்கு எதிரான பெரும் எதிப்பு அலையை எதிர்கொண்டது; டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு இணையான புகழ் பெற்ற ஒரு மாநிலத் தலைவர் பா.ஜ.க-வுக்கு இல்லை; அதன் கீழ் உள்ள டெல்லி மாநகராட்சி ஊழலில் மூழ்கி, திறமையின்மையால் சிதைக்கப்பட்டது என்ற கருத்தை அசைக்க முடியவில்லை. இருந்தாலும்கூட, வாக்கு எண்ணும் நாளில், காலையில் பா.ஜ.க ஆம் ஆத்மிக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், இறுதியில் பின்வாங்கியது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறியது போல், இந்த வெற்றி ஒரு எளிதான வெற்றி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை”. “ஆறு மாதங்கள் தீவிர வேலையின் பலனாக இருந்தது. அவர்கள் டெல்லி அரசின் மது கொள்கை வழக்கைப் பற்றி எதிர்மறையான பிரச்சாரம் செய்யாமல் இருந்திருந்தால் பா.ஜ.க வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்திருக்கும். அவர்களின் பொய்கதை வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளில் வேலை செய்தது. எப்படியும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தளம் உள்ளது. அவர்களுக்கு பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க பொய்கதை தேவைப்படுகிறது. இருப்பினும், இறுதியில், குற்றச்சாட்டுகள் நிற்கவில்லை” என்று கூறினார்.

இந்த மிகப்பெரிய வெற்றி வித்தியாசம் என்பது – அடுக்குமாடி குடியிருப்புகள் சங்கம் செல்வாக்கு செலுத்தும் மேல்தட்டு மக்களும், பிரச்சனைகள் அதிகம் உள்ள நகரத்தின் ஏழ்மையான பகுதிகளுக்கும் இடையேயானது என்று மற்றொரு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டது. இது டிவியில் விவாதங்களின் மூலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார். டெல்லி மாநகராட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் அல்லது லோக்சபா தேர்தல் உருவாக்கும் அதே வகையான பரபரப்பை உருவாக்கவில்லை என்பதால், அதிக வசதி படைத்த மக்கள் ஏதோ ஒன்றை தவிர்க்க முயற்சி செய்கின்றனர்.

டெல்லி மாநிலத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் இதற்குச் சாட்சியமாக உள்ளது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் தெற்கு டெல்லியின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் மிகக் குறைந்த அளவு வாக்குப்பதிவு இருந்தது. அதே நேரத்தில், கிராமப்புற பகுதிகளிலும், வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளிலும் அதிக வாக்குப்பதிவு சதவீதத்தைக் கண்டன.

ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதிகள் – அங்கீகாரம் இல்லாத காலனிகள், கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் மக்கள் ஜுக்கி ஜோப்ரி பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகள்- மின்சார மானியம் முதல் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் வரை டெல்லி அரசாங்கத்தின் திட்டங்களால் பயனடைபவர்களில் பெரும்பாலோர் வசிக்கின்றனர். கெஜ்ரிவால் அரசாங்கம் தங்களுக்காக வேலை செய்கிறது என்பது இங்குள்ள மக்களுக்கு மட்டுமே தெரியும் என்று மற்றொரு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

ஒரு மூத்த பா.ஜ.க தலைவர், உண்மையில், ஆம் ஆத்மியை எதிர்க்கும் போது பா.ஜ.க-வின் கற்பனையான தோல்வியை ஒப்புக்கொண்டார். “ஏற்கனவே கெஜ்ரிவாலின் திட்டங்களால் பயனடைபவர்களுக்கு நாங்கள் புதிதாக எதுவும் வழங்கவில்லை. டெல்லியில் பணிபுரியும் ஒரு நபருக்கு தனது கிராமத்திற்கு பணம் அனுப்பினால், மின்சாரத்தில் 2,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது. பஸ் பயணத்தில் 1,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது – இவை எல்லாம் சேர்ந்துதான் அவர்கள் வெற்றி பெற உதவியுள்ளது” என்று அவர் கூறினார். “நாங்கள் அவரை (கெஜ்ரிவால்) தோற்கடிக்க வேண்டும் என்றால், நாங்கள் அவரது இடத்தில் செயல்பட வேண்டும்.” என்று அந்த பா.ஜ.க மூத்த தலைவர் கூறினார்.

விளிம்புநிலை மக்கள் மீதான பிரச்சாரத்தின் கவனம், நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆம் ஆத்மி அளித்த மற்றொரு வாக்குறுதியுடன் சேர்ந்துகொண்டது – ஒரே கட்சியின் கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ உங்கள் பகுதியில் இருப்பது உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை எளிதாக்கும். “அடுக்குமாடி குடியிருப்புகள் சங்கங்கள் செயல்படும் காலனிகளில், எங்கள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் அடிக்கடி சிக்கிக் கொள்வார்கள்” என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறினார். ‘கெஜ்ரிவால் கி சர்கார், கெஜ்ரிவால் கா பர்ஷாத்’ என்ற முழக்கம் இந்த வாக்காளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக விளக்கினார். “தங்கள் குரல்கள் மிகவும் எளிதாக கேட்கப்படும் என்பதை அவர்கள் உணர்ந்தவுடன், அவர்கள் சித்தாந்தத்தை மறந்துவிடுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

ஏறக்குறைய அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரண்டு குடிமைப் பிரச்சினைகள் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பை மற்றும் உடைந்த சாலைகள் பிரச்னை எதிரொலிப்பதாகக் கூறினர் – “நாங்கள் குப்பை மற்றும் உடைந்த சாலைகளில் கவனம் செலுத்துவதை உறுதிசெய்தோம். குறிப்பாக சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம்” என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூறினார். பாஜக மீது அழுத்தம் கொடுக்கும் மற்றொரு காரணி ஆம் ஆத்மியின் இத்தகைய பிரச்சினைகளில் இடைவிடாத செய்தியாளர் சந்திப்புகள் ஆகும். “ஏப்ரல் 2020 மற்றும் தேர்தல்களுக்கு இடையில், நாங்கள் 800-க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினோம். அது நிச்சயமாக அவர்களின் மன உறுதியைக் குலைத்துவிட்டது” என்று கூறினார்.

மற்றொரு தலைவர் இந்த விஷயங்களைச் சுருக்கமாகக் கூறினார்: “மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கத் தயாராக இருந்தனர். இறுதியில், எல்லாவற்றையும் கெஜ்ரிவாலுக்குக் கொடுப்போம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டனர்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Analysis what helped to aap edge past bjp in mcd polls