Somya Lakhani
காஷ்மீரின் அச்சபல் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது பதூரா என்ற கிராமம். அதில் கலவரக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 19வது ராஷ்ட்ரிய ரைஃபில்ஸை சேர்ந்த மேஜர் கேத்தன் ஷர்மா கொல்லப்பட்டார்.
அன்று காலையில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு வேளை இது தான் என் கடைசி ஃபோட்டோவா கூட இருக்கலாம் என்று தன்னுடைய புகைப்படத்தை பதிவு செய்த அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தது பெரும் கவலையை அளித்துள்ளது.
நேற்று (18/06/2019) மீரட்டில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு அவருடைய உடல் கொண்டு வரப்பட்டது. அவருடைய தாய் உஷா “என் மகன் துப்பாக்கிக்கெல்லாம் பயந்தவன் இல்லை. அவன் எங்கே போனான். நீ எப்போ வருவ ரானு” என்று அழுது கொண்டிருக்கிறார். மனைவி எரா மந்தர் ஷர்மா, 4 வயது பெண் குழந்தை கைய்ரா, பெற்றோர்கள் உஷா, ரவீந்தர், தங்கை மேகா என்று மிகவும் அழகான குடும்பத்தை பெற்றிருந்தார் ஷர்மா.
எராவும், கைய்ராவும், சம்பவம் நடந்த தினத்தன்று காசியாபாத்தில் இருக்கும் எராவின் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். கேத்தன் ஷர்மாவிற்கு காயம் பட்டிருப்பதாக மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டத்து. 3.30 மணிக்கு கேத்தன் உயிரிழந்த தகவலை நேரில் வந்து கூறினார்கள் ராணுவ வீரர்கள்.
இதன் முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தன்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போன நாளில் இருந்து தினமும் வீட்டிற்கு போன் செய்து பேசும் கேத்தன் ஷர்மா, கூர்கானில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு ராணுவத்தின் மீது வந்த ஆவல் காரணமாக, வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2012ம் ஆண்டு தேர்வு எழுதி லெஃப்டினட்டாக பதவி ஏற்றார். பிறகு சிறிது நாட்கள் கழித்து அவருக்கு திருமணம் நடைபெற்றது.
ஷர்மா தன்னுடைய அப்பாவிடம் இறுதியாக பேசிய போது, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரைக்கு நீங்கள் வரவேண்டும். அது மிகவும் பாதுகாப்பானது. ராணுவம் உங்களுக்கு சிறப்பான பாதுகாப்பினை வழங்கும் என்றும் கூறியுள்ளார். நேற்று மாலை 2.25 மணி அளவில் மூவர்ண கோடி போர்த்தப்பட்டு இறுதி மேஜரின் உடல் மீரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது மணி நான்கு. அந்த தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் வந்தே மாதரம் என்றும் ஜெய் ஹிந்த் என்றும் உரக்க சொல்லிக் கொண்டிருந்தனர்.
மேஜரின் 4 வயது மகளுக்கோ தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்றோ, ஏன் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றார்களோ என்று புரியாமல் பக்கத்துவீட்டுச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு மாதம் வரை மீரட் நகரில் தங்கிவிட்டு 22 நாட்களுக்கு முன்னர் தான் காஷ்மீர் சென்றார் கேத்தன். மாலை 5 மணி அளவில் அவருடைய உடலுக்கு சிதை மூட்டப்பட்டது.
மேலும் படிக்க : 50 வருட திருமண வாழ்க்கையை புத்தகமாக எழுத நினைத்தோம் ! அனைத்தும் வீணாகிவிட்டது.. எவரெஸ்ட்டில் மனைவியை இழந்த கணவர் வேதனை