கடலில் வழிதவறிய 49 வயதான அந்தமானைச் சேர்ந்த நபர் வெள்ளிக்கிழமை ஒடிஷாவில் உள்ள பூரி மாவட்டத்தில் கரைசேர்வதற்கு முன்பு கடலில் 28 நாட்கள் இருந்து உயிர் பிழைத்துள்ளார்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள ஷாஹித் தீவில் வசிக்கும் அம்ரித் குஜூர் வழக்கமாக ஒரு வழியில் கடலில் பயணம் செய்கிறார். அவர் மளிகைப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களை எடுத்துச்சென்று அவ்வழியாக கடந்து செல்லும் கப்பல்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
செப்டம்பர் 28 ஆம் தேதி குஜூரும் திவ்யரஞ்சன் என்கிற ஒரு நண்பரும் அந்தமான் நிக்கோபாரிலிருந்து இந்தியப் பெருங்கடலில் உள்ள கப்பல்களுடன் வியாபாரம் செய்ய புறப்பட்டனர்.
எப்படியோ புயலில் சேதமடைந்த படகு வழக்கமான கடல்வழியிலிருந்து விலகிச் சென்றது. “படகின் எடையைக் குறைக்க நாங்கள் எங்கள் சரக்குகளை எல்லாம் வெளியே போட வேண்டியிருந்தது. படகு மோசமாக சேதமடைந்தது” என்று குஜூர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
“கடலில் சிக்கித் தவித்தபோது உதவிக்காக சில பெரிய கப்பல்களுக்கு அவர்கள் சமிக்ஞை செய்தனர். ஆனால், அவற்றை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.
அவர்களுக்கு ஒரு பர்மியக் கப்பலின் வடிவத்தில் உதவி கிடைத்தது. அந்த கப்பல் அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு திரும்ப செல்வதற்கு 260 லிட்டர் எரிபொருளை படகில் நிரப்பியது. மேலும், அவர்களுக்கு ஒரு திசைக் காட்டியையும் பொருத்தியுள்ளனர். இருப்பினும், ஒடிஷாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குஜூர், அவர்களை மற்றொரு புயல் தாக்கியதாகவும் அதனால் அவர்கள் மீண்டும் வழி தவறியதாகவும் கூறினார்.
எரிபொருள் தீர்ந்த பிறகு, இருவரும் மீண்டும் சிக்கிக்கொண்டனர். “நான் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். ஆனால், கடல் நீரைக் குடித்து உயிர் பிழைத்தேன். “நான் எனது துண்டை நனைத்து வடிகட்டினேன். பின்னர் என் துண்டை பிழிந்தேன்”என்று குஜூர் கூறினார்.
கிருஷ்ணபிரசாத் ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிமன்யு நாயக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அம்ருத்தின் கதையை விசாரித்ததாகக் கூறினார். மேலும் அவர், “இந்த நேரத்தில், அமிர்த் குஜூர் மற்றும் திவ்யரஞ்சன் ஆகியோர் கடந்த மாதம் முதல் கடலில் காணாமல் போனதாக நாங்கள் தீர்மானித்தோம். தீவுத் தொடரில் அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளனர்” என்று கூறினார்.
இருப்பினும், குஜூரின் நண்பர் திவ்யரஞ்சனைக் காப்பாற்ற முடியவில்லை. திவ்யரஞ்சனின் மரணத்திற்கான சூழ்நிலைகளை சரிபார்க்கவும் வாய்ப்பில்லை. குஜூர் கூறுகையில், “நாட்கள் அதிகமானதால் கடல் நீரைக் குடித்ததால் பசி ஏற்பட்டது. அவர் இறக்கும் வரை ஒவ்வொரு நாளும் அவர் பலவீனமடைந்தார். நான் அவரது உடலைப் படகில் இருந்து கடலில் விட வேண்டியிருந்தது.” என்று குஜூர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.