குடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா ? சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ...

அந்தமான் தீவுகளில் 5 நாட்கள் / 4 இரவுகள் தங்குவதற்காக புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது IRCTC Tourism

Andaman Islands IRCTC Tour Packages : விடுமுறை காலங்கள் நெருங்கத் துவங்கியுள்ளன. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடையப் போகிறது. அதே போல், கிறிஸ்துமஸ் மற்றும் வருடப்பிறப்பு என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருகின்றன.

கடற்கரைகள், தீவுகள் என ஜாலியாக அசத்தலாக அந்தமான் செல்ல விரும்புபவர்களுக்கு இந்திய சுற்றுலாத்துறை புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Andaman Islands IRCTC Tour Packages

அந்தமான் தீவுகளில் 5 நாட்கள் / 4 இரவுகள் தங்குவதற்காக புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது IRCTC Tourism. அந்தமான் தலைநகரம் போர்ட் பிளையர், போர்ட் ப்ளையர் நார்த் பே தீவு (கோரல் ஐலாந்த்), ராஸ் தீவு, (Ross Island) மற்றும் ஹேவ்லாக் தீவு (Havelock Island) ஆகிய இடங்களை உள்ளடக்கிய சுற்றுலாவிற்கான புதிய பேக்கேஜ்கள் அறிமுகமாகியுள்ளன. ஸ்டாண்டர் பேக்கேக் அல்லது கம்ஃபர்ட் பேக்கிஜினை பயணிகள் தங்களின் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

Andaman Islands IRCTC Tour Packages சேவைகள்

இந்த பேக்கேஜ்கள், மூன்று இரவுகள் அந்தமானின் போர்ட்-ப்ளையரில் தங்குவதற்கும், ஒரு இரவு ஹேவ்லாக்கில் தங்குவதற்கும், சைட் சீயிங்கிற்கான பிக்-அப் மற்றும் ட்ராப்களுக்கான செலவுகள், நுழைவுக் கட்டணங்கள், படகு சவாரிகளுக்கான கட்டணங்கள், காடுகளை சுற்றிப்பார்ப்பதற்கான கட்டணங்கள் என அனைத்தும் இதற்குள் அடக்கம். அங்கு தங்க இருக்கும் நான்கு நாட்களில், முதல் நாள் தவிர மீதம் இருக்கும் நாட்களில் காலை உணவு வழங்கப்பட்டுவிடும்.

The Package Excludes

இங்கிருந்து அந்தமான் செல்வதற்கான விமான கட்டணங்கள், சலவை செய்வதற்கான கட்டணங்கள், அலைபேசி கட்டணங்கள், தண்ணீர் பாட்டில்களுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை பயணிகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். புயல், கனமழை, மற்றும் இதர இயற்கை பேரிடர்களால் ஏற்படும் செலவுகளையும் பயணிகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Andaman Islands IRCTC Tour Packages

சுற்றிக் காண்பிக்கப்படும்  இடங்கள்

மானுடவியல் அருங்காட்சியகம், கார்பைன்ஸ் கோவ் பீச், செல்லுலார் சிறை, கப்பற்படை அருங்காட்சியகம், ராதாநகர் கடற்கரை, காலா பாதர் கடற்கரை ஆகியவற்றை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.  இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான IRCTC இணையத்தில் உங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க :  நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close