சுபாஷ் சந்திர போஷின் கனவை நினைவாக்க இந்த அரசு உறுதி ஏற்றுள்ளது - அந்தமானில் மோடி பேச்சு

செல்லுலார் ஜெயிலை நேரில் பார்வையிட்ட மோடி, அங்கு உயிர் துறந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

Andaman Islands Name Changing : அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருக்கும் ராஸ் தீவுகள், நெய்ல் தீவு, ஹாவ்லாக் தீவு – இம்மூன்று தீவுகளின் பெயர்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், அந்த பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. முறையாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு, சாஹீத் த்வீப், ஸ்வராஜ் தீப் என்று பிரதமர் நரேந்திர மோடியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Andaman Islands Name Changing

இந்த விழாவிற்காக நேற்று அந்தமான் சென்றிருந்தார் பிரதமர் மோடி. இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இந்த தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  அஜாத் ஹிந்த் பாவுஜ் ( Azad Hind Fauj (Indian National Army)) உருவாக்கத்தின் – 75 வது நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில், நேதாஜி அரங்கில், மூவர்ண கொடி ஏற்றி, உரையாற்றினார் நரேந்திர மோடி.

சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றி நாம் நினைவு கூறும் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷை நாம் பெருமையுடன் நினைவு கூறுகின்றோம். ஆஜாத் ஹிந்து அரசின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஷ், அந்தமான் மண்ணில் தான் நாட்டின் சுதந்திரம் பற்றிய முதல் முடிவினை எடுத்தார்.

75 ரூபாய் நாணயம் வெளியீடு

இந்தியாவில் என்றும் அந்தமான் சிறப்பான அந்தஸ்த்தை பெறுகிறது. நான் பெருமையாக அறிவிக்கின்றேன், ராஸ் தீவின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் த்வீப் என்று அழைக்கப்படும்.  இரண்டாம் உலகப் போரில், அந்தமான் தீவுகளை ஜப்பான் அணி கைப்பற்றியது. ஜப்பானின் இராணுவத்துடன் கூட்டணியில் இருந்தது ஹிந்து அஜாத். அந்தமான் வெற்றி பெற்றவுடன், நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அந்தமான் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முக்கியமான நாளில் தபால் தலை, மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். நேதாஜியின் நினைவாக பல்கலைக்கழகம் கட்டப்படும் என்று தெரிவித்தார் நரேந்திர மோடி.

போர்ட் பிளேயர் தெற்கு முனையில் அமைந்திருக்கும் மெரினா பார்க்கில் 150 அடி நீள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றினார் மோடி.  பின்பு அந்தமான் நிக்கோபர் தீவுகளின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட இருக்கும் முக்கியமான திட்டங்கள் பற்றி பேசினார்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளின் வளர்ச்சி பற்றி பேசிய மோடி

உணவு பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுற்றுலா துறைகளின் மூலம் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுவாசிகளின் வாழ்வினை மேம்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் போர்ட் பிளேயரில் இருக்கும் தனிகாரி அணையின் உயரம் அதிகரிக்கப்படும் என்றும், அதனால் அப்பகுதி மக்கள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீர்பற்றாக்குறை இல்லாமல் வசிப்பார்கள் என்று கூறினார்.

செல்லுலார் ஜெயிலை நேரில் சென்று பார்த்த நரேந்திர மோடி, அங்கு உயிர் துறந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். பின்பு சுனாமியால் இறந்தோருக்காக வைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார் மோடி.

பின்பு கார் நிக்கோபர் சென்று, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார் மோடி. கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், மின்சாரவசதி, விளையாட்டுத் துறை ஆகியவை மேம்படுத்தப்படும் என்று உறுதி கூறினார்.

மேலும் படிக்க : எச்சரிக்கை… அந்தமான் தீவுகள் உங்களின் கேளிக்கை பிரதேசமல்ல

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close