Advertisment

அந்தமானில் பாலியல் சித்ரவதை.. 3 மாதம் வீட்டுச் சிறை.. உயிருக்கு அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்

வேலை வாங்கித் தருவதாக கூறி அந்தமான் நிகோபார் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் துறை ஆணையர் ஆர்.எல். ரிஷி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
அந்தமானில் பாலியல் சித்ரவதை.. 3 மாதம் வீட்டுச் சிறை.. உயிருக்கு அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்

அந்தமான் நிகோபார் தீவின் போர்ட் பிளேயரில் வசிக்கும் 21 வயதான பெண், முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் துறை ஆணையர் ஆர்.எல். ரிஷி மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அவர் சந்தித்த வேதனைகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியுள்ளார்.

Advertisment

வாரணாசியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். குழந்தை 2 வயதாக இருக்கும்போது தாய் உயிரிழந்தார். தந்தை, ஒரு ஓவியர். மனைவி உயிரிழந்த சில மாதங்களில் மறுமணம் செய்து கொண்டார். சிறு வயதிலிருந்தே அந்த குழந்தை பல வேதனைகளை எதிர்கொண்டு வந்துள்ளார். புதிய ஆடைகள் இல்லை, நண்பர்கள் இல்லை, பெற்றோரின் அன்பையோ பாசத்தையோ அவள் பெறவில்லை.

15 வயதாக இருக்கும் போது, அவளுடைய தாய்வழி மாமா பள்ளி புத்தகங்களுக்கு தீ வைத்தார். இது முதல் முறை அல்ல. ஆனால் இந்த முறை அவளது பள்ளி ஆய்வக புத்தகத்தை எரித்தார். இதனால் கோபமடைந்த அவள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்றார். போலீசார் அவரை சமரசம் செய்து அனுப்பினர்.

இதையடுத்து பாட்டி, மாமா அவளை போர்ட் பிளேயருக்கு அனுப்பினர். போர்ட் பிளேயரில் தந்தை வீட்டிற்கு அனுப்பினர். அங்கு அவர் தொடர்ந்து பள்ளி படித்து வந்ததாக தெரிகிறது. 11-ம் வகுப்பு படிக்கும் போது தனது 17-வது வயதில் அவரது சித்தி படிப்பை நிறுத்தி, அவரை வேலைக்கு அனுப்பினார். கடையில் விற்பனையாளராக பணிக்கு சேர்ந்தார். மாதம் 7,000 சம்பாளம். தினமும் ரூ.10 அவரது சித்தி அவளுக்கு செலவுக்கு வழங்கினார்.

இப்படி வாழ்க்கையை கடத்தி வந்த அவர், கொரோனாவிற்குப் பிறகு, சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அப்போது, ஹோட்டல் உரிமையாளரான சந்தீப் சிங் என்கிற ரிங்குவைச் சந்தித்தார். மேலும் போர்ட் பிளேயரின் 2 உயர் அதிகாரிகளை சந்தித்தார். அதிலிருந்து அவருக்கு பிரச்சனையை ஆரம்பித்ததாக கூறுகிறது.

அவர் கூறுகையில், "இப்போது எனக்கு 21 வயதாகிறது. திருமணமாகி விட்டது. கணவர் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியில் சென்று வருவார். நான் இப்போது பாதிக்கப்பட்டவளாக இருக்கிறேன்" என்றார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. 45 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த அக்டோபர் 1-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.

அவர் கூறுகையில், "நான் பிறந்ததில் இருந்து பல போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறேன். அது இன்னும் தொடர்கிறது. 3 மாதங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டேன். என் உயருக்கு அச்சுறுத்தல் உள்ளது" என்று கூறினார்.

"என் வீட்டில் 3 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 3 ஷிப்டுகளாக வேலை செய்கின்றனர்" என்றார். வேலை வாங்கித் தருவதாக ரிஷி தன்னை நரேன் வீட்டிற்கு அழைத்து சென்றதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

2-வது முறையாகவும் அவர் நரேன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தலைமைச் செயலாளர் தனக்கு அரசு வேலை உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அதனால் சென்றேன் என்றார். அதன்பின் என் கணவருடன் திருமணமானது. வேலை குறித்து தொழிலாளர் துறை ஆணையரை தொடர்பு கொண்டேன் ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உறுதியளித்தபடி எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறினார்.

கடந்த ஜூலை மாதம், ரிஷி என்னை தொடர்பு கொண்டார். அப்போது, தலைமைச் செயலர் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், அதனால் எனக்கு உதவி முடியாது எனவும் கூறினார். இதனால் விரக்தியடைந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக அவர் கணவர் அவளை காப்பாற்றியுள்ளார்.

அதன் பின், அவர் கணவரிடத்தில் நடந்தவை அனைத்தையும் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு பிறகு அவரது கணவர் கேம்ப்பெல் பே என்ற இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அன்றிரவு காவல்துறையினரின் ஒரு தரப்பு அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர். பின்னர், ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவரிடம் அநாகரிகமான, தனிப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். தலைமைச் செயலாளரின் வீட்டிற்குச் சென்ற போது எந்த உள்ளாடை அணிந்தீர்கள்? என்பது போன்ற கேள்விகளை கேட்டக்கப்பட்டதாக அவர் கூறினார். காவல்துறையினர் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் துறை ஆணையர் ஆர்.எல். ரிஷி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment