மருத்துவர்கள் தினத்தன்று மகத்தான சேவையை துவங்கி வைத்த ஜெகன்! மக்கள் மகிழ்ச்சி

108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓட்டும் நபர்களின் சம்பளத்தை ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ. 28 ஆயிரத்திற்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.

 Tamil nadu news today live
Tamil nadu news today live

Andhra CM Jagan Mohan Reddy inaugurated new ambulance services : கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஆந்திர மாநிலத்தில் அதிரடியான சேவை ஒன்றை துவங்கி வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.  ஆந்திரமாநிலம் விஜயவாடா பென்ஸ் கூட் ரோட்டில் 1088 ஆம்புலன்ஸ்களுக்கான சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 Andhra CM Jagan Mohan Reddy inaugurated new ambulance services
கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவைகளை துவக்கி வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

மேலும் படிக்க : என்கவுண்டர்கள் கொண்டாடப்படும் வரை சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நிகழும்- திலகவதி ஐ.பி.எஸ்

இதற்காக ரூ. 201 கோடி நிதி செலவிடப்பட்டது. ஆரம்பத்தில் ஆந்திராவில் 1,19,545 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது, 74,609 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களில் 26 வாகனங்கள் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நகர்புறங்களில் இருக்கும் நபர்கள் 108 எண்ணிற்கு அழைத்து அவசரவாகன சேவையை பெற்றுக் கொள்ளலாம். கிராமப்புறங்களில் வசிக்கும் நபர்கள் 104 எண்ணிற்கு அழைத்து ஆம்புலன்ஸ் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய மருத்துவர்கள் தினத்தில் இந்த நிகழ்வினை நடத்திய ஆந்திர மாநில முதல்வர் குண்டூர் ஜி.ஜி.ஹெச். மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்கான பிரிவினை காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகரித்துள்ளதால் விலைமதிப்பில்லா உயிர்களை காப்பாற்ற இயலும் என்று கூறினார். மேலும் 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓட்டும் நபர்களின் சம்பளத்தை ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ. 28 ஆயிரத்திற்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Andhra cm jagan mohan reddy inaugurated new ambulance services

Next Story
தமிழக பெண் தலைவரின் சர்ச்சை போட்டோக்கள் : டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுDelhi high court, Sasikala pushpa, tamil nadu, photos, videos, facebook, google. order, youtube, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com