Jagan Mohann Reddy meets Prime Minister : ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பல்வேறு முக்கிய பிரச்சனைகளை பேசியுள்ளார். 40 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போலவரம் அணை, கடப்பா எஃகு தொழிற்சாலை, நிதி ஒதுக்கீடு, கிருஷ்ணா கோதாவரி நதி நீர் இணைப்பு குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவையும் அவர் அளிப்பதாக கூறியுள்ளார்.
நதி நீர் பங்கீடு தொடர்பாக அவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் நதி நீர் பங்கீடு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : பீகார் தேர்தல்: பஸ்வான் கட்சியின் வியூகம் என்ன?
போலவரம் அணை கட்டுமானத்திற்காக நிலுவைத் தொகையான ரூ.10,000 கோடியில் 3,250 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் - பிரதமர் சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. தன் மீது இருக்கும் சி.பி.ஐ வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கேட்கவே ஜெகன்மோகன் பிரதமரை சந்தித்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் அவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil