Andhra CM Jaganmohan Reddy : ஆந்திரா மக்களால் பாகுபலி முதல்வர் என அன்போடு அழைக்கப்படும் ஜெகன் மோகன் ரெட்டி, கேன்சர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிய நிகழ்வு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முடிவு தான். பல பெருமைகளுக்கு சொந்தக்காரான முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தோற்கடித்து ஆந்திரா முதல்வராக பொறுப்பேற்றார். இளம் முதல்வர் என்ற சிறப்பு பெயரை ஜெகன் மோகன் ரெட்டி சொந்தமாகினார்.
இவர் பதவியேற்ற அன்று மக்கள் வெள்ளம் அரங்கத்தில் குவிந்தது. மக்களின் ஆராவார கைத்தட்டல்கள் உடன் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடனே இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடயே ஜெகன் மோகன் ரெட்டிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் மற்றொரு செயல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நேற்றைய தினம் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு கான்வாய் மூலம் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர்கள் சிலர் பதாகைகளுடன் முதல்வரின் காரை மறைக்க முற்பட்டனர். உடனே காவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். இதனை காரில் இருந்தப்படியே உடனே கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி, காரை நிறுத்தி அந்த இளைஞர்களிடம் சென்று என்ன பிரச்சனை என்று விசாரித்தார்.
அப்போது அவர்கள், தங்கள் குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் நீரஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், நீரஜின் மருத்துவ செலவுக்கு 25 லட்சம் வரை பணம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும், வறுமையான தங்களது குடும்பம் இதுவரை வெறும் 40 ஆயிரம் மட்டுமே சேர்த்துள்ளதாக கூறினர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர்,நீரஜின் மருத்துவ செலவுக்கு 20 லட்சம் பணம் தருவதாக உறுதி அளித்து அந்த பணத்தை உடனே செக் மூலம் அவர்களுக்கு அளிக்கவும் ஆட்சியரிடம் உத்தரவிட்டார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த உதவிக்கு நீரஜின் குடும்பத்தினர் அவரின் காலில் விழுந்து நன்றிக் கூறினர்.
இந்நிகழ்வு வேகமாக இணையத்தில் பரவியது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.